மத்திய அரசு கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறது: பிருந்தாகாரத் குற்றச்சாட்டு!

buy Lasix online height=”150″ align=”left” border=”0″ />நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்திற்காக விவசாயிகள், பழங்குடி மக்களை அவர்களது நிலங்களில் இருந்து வெளியேற்றக் கூடாது என்று வலியுறுத்தி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிதாவது:-

காந்தியவாதி அன்னா ஹசாரேயின் போராட்டத்தை மத்திய அரசு நசுக்க பார்க்கிறது. அவரது உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அதற்கு தற்போதைய லோக்பால் மசோதாவை திரும்ப பெற்று திருத்தங்களுடன் கூடிய புதிய வலுவான மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

நீதித்துறைக்கு என தனியாக விதிமுறைகளை உருவாக்க வேண்டும். தற்போது மத்திய அரசு கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறது. ஆனாலும் பாராளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வருவதை விரும்பவில்லை. ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைவது, மத்திய அரசு சரியாக செயல்படுவதில்லை என்பதையே காட்டுகிறது.

தமிழகத்தில் அ.தி.முக. அரசு சிறப்பாக செயல்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது வரவேற்கத்தக்கது. தேயிலை பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேற்கண்டவாறு பிருந்தாகாரத் கூறினார்.

Add Comment