பி.இ.: எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும்? கடந்த ஆண்டு கட்ஆஃப் மதிப்பெண்ணை வைத்து கணக்கிடலாம்

பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களுக்கு எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை கல்லூரிகளின் கடந்த ஆண்டு கட்ஆஃப் மதிப்பெண்ணை வைத்துக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு கல்லூரியின் பாடவாரியான கட்ஆஃப் மதிப்பெண் தொடர்பான விவரங்கள்  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கணிதம், இயற்பியல், வேதியியில் பாடங்களின் மதிப்பெண்ணை வைத்து பி.இ. கட்ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

2010-ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் கணிதம், buy Levitra online இயற்பியல் தேர்வுகள் கடினமாக இருந்ததால் அவற்றில் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர். அதனால், மாணவர்களின் கட்ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.5 வரை குறைவாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது.
மாணவர்களுக்கு தங்கள் கட்ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் எந்தப் பாடப் பிரிவு கிடைக்கும் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

இது குறித்து பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: மாணவர்கள் தங்களுடைய கட்ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 3 மதிப்பெண்ணை கூட்டியும், 3 மதிப்பெண்ணைக் குறைத்தும் குறித்துக் கொள்ள வேண்டும். அந்த மதிப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு எந்தெந்தக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளன என்பதை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கல்லூரியின் பாடவாரியான கட்ஆஃப் மதிப்பெண் விவரங்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்கு எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை ஓரளவுக்கு கணித்துக் கொள்ளலாம் என்றார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்: ஓ.சி. பிரிவு மாணவர்கள் கட்ஆஃப் மதிப்பெண் 198.75 வரையிலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 198.5 மதிப்பெண் வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 197.25 மதிப்பெண் வரையிலும் குறைந்தபட்ச கட்ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (சி.எஸ்.இ.), எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் (இ.இ.இ.), எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் (இ.சி.இ.) படிப்புகளில் சேருவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் சேர ஓ.சி. பிரிவு மாணவர்கள் 198 வரையிலும், ஜியோ இன்பர்மேடிக்ஸ், இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பத்துக்கு 197 வரையிலும் கட்ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

பி.சி. பிரிவினர் சிவிலுக்கு 197.5 வரையிலும், மெக்கானிக்கலுக்கு 198.5 வரையிலும் பெற்றிருக்க வேண்டும் என்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் சிவிலுக்கு 196.5 மதிப்பெண்ணும், மெக்கானிக்கலுக்கு 197 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment