மாணவிகளிடம் பாலியல் தொல்லை! தலைமையாசிரியரை கைது செய்ய போராட்டம்

அலங்காநல்லூர்: பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்த தலைமை ஆசிரியரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து, மார்க்சிஸ்ட் உறுப்பினர் பிருந்தா காரத் அந்த கிராமத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை அருகேயுள்ள பொதும்பு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆரோக்கியசாமி. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் இவர் பாலியல் தொல்லை செய்த்தை அறிந்த மாணவியின் தாய் பஞ்சு கொடுத்த புகாரின் பேரில், காவல்துறை தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, ஆசிரியர் சண்முகம், ஆசிரியை அமலிரோசி ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.

ஆரோக்கியசாமியை தவிர மற்ற 2 பேரும் நீதிமன்றத்தில் முன்பிணை பெற்றனர். ஆரோக்கியசாமி பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்க முடியாது என கிராமத்தை சேர்ந்த பலரும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதற்கிடையே ஆரோக்கியசாமியை கல்வித்துறை பணிநீக்கம் செய்தது. ஆனாலும், அவரை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை.

அவரை கைது செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 134 பேர் கைது Buy Ampicillin செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பொதும்பு கிராமத்துக்கு வந்தார். ஆசிரியரை கைது செய்யாத காவல்துறையினரை கண்டித்து மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது பிருந்தா காரத் பேசுகையில், ‘‘ஆசிரியர்களே மாணவிகளிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால்தான் பெண் கல்வி பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களது குடும்பத்தினரிடம் போலீசார் இரவில் வந்து மிரட்டும் வகையில் விசாரிக்கின்றனர்’’ என்றார்.

பின்னர் கூடுதல் எஸ்.பி மயில்வாகனனை செல்போனில் தொடர்பு கொண்ட பிருந்தா கரத், ‘‘ஆரோக்கியசாமி மீது வழக்கு பதிவு செய்து 45 நாட்களாகியும் இதுவரை ஏன் அவரை கைது செய்யவில்லை ’’ என  கேட்டதுடன், ‘‘நீங்கள் வரும்வரை கிராமத்தை விட்டு போகமாட்டேன், என்றார். இதை தொடர்ந்து டி.எஸ்.பி.,க்கள் பாண்டி, ரவிச்சந்திரன் ஆகியோர் கிராமத்துக்கு வந்து பிருந்தா கரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

Add Comment