நெல்லை மாவட்டம் பணகுடி அழகியநம்பிபுரத்தைச் சேர்ந்தவர்பல லட்சத்தைச் சுருட்டிய அதிமுக நிர்வாகி!

பொது மக்கள் பெயரில் வங்கியிலிருந்து பல லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததோடு, விஷயம் அறிந்தவருக்குக் கொலைமிரட்டலும் விடுத்த அதிமுக மாவட்ட நிர்வாகியைக் காவல்துறை தேடி வருகிறது.

நெல்லை மாவட்டம் பணகுடி அழகியநம்பிபுரத்தைச் சேர்ந்தவர் அரசரத்தினம். இவரது மனைவி எஸ்கலின்மேரி. அதிமுக மாவட்ட மகளிரணி இணைச்செயலாளராக உள்ள இவர் தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறார். இதன் மூலம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கியில் கடனும் வாங்கி கொடுத்து வந்தார். அவரிடம் ஆண், பெண்கள் போட்டிபோட்டு, ரூ50 ஆயிரம், ஒரு லட்சம், 2 லட்சம் என கடன் கேட்டு விண்ணப்பித்தனர். யாருக்கும் வங்கியில் இருந்து கடன் பெற்றுக்கொடுக்க வில்லை.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பணகுடி சிவலிங்க நாடார் காம்பவுண்ட்டைச் சேர்ந்த ஞானபிரகாசம் மகன் கூலி தொழிலாளி ஜெகன் என்பவர் பெயருக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்தது. அதில், Buy Viagra நீங்கள் எங்களிடம் வாங்கிய ரூ.2 லட்சத்திற்கு இதுநாள்வரை தவணை கட்டவில்லை. உடனடியாக அசலும் வட்டியும் கட்டாவிட்டால் உங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த நோட்டீசை எடுத்துக்கொண்டு எஸ்கலின்மேரியிடம் சென்றார். அதைப் பார்த்த அவர், நீ கவலைப்படாதே இது கண்துடைப்புக்காக வங்கியில் இருந்து அனுப்புவார்கள், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஜெகனை சமாளித்து அனுப்பினார். ஆனால் ஜெகனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து பணகுடி காவல்துறையில் புகார் செய்தார். இந்தத் தகவல் எஸ்கலின்மேரிக்கு தெரியவரவே ஆத்திரமடைந்த அவர் தனது கணவருடன் சென்று ஜெகனிடம், “எப்படி எங்கள் மீது நீ காவல்துறையில் புகார் செய்யலாம். உன்னை உயிரோடு விடமாட்டோம்” என்று கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் ஜெகனுக்குப் பயம் ஏற்பட்டது.

மனமுடைந்த ஜெகன் நேற்று விஷம் குடித்தார். இது பெற்றோர்களுக்குத் தெரியவரவே அவர்கள் கதறியழுதபடி மகனை நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பணகுடி காவல்துறையிலும் புகார் செய்யப்பட்டது. காவல்துறை துணை ஆய்வாளர் ரசலையன் விசாரணை நடத்தி எஸ்கலின்மேரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது 3 பிரிவில் வழக்கு பதிந்து அவர்களைத் தேடி வருகிறார். ஜெகனைப்போல் நெல்லை, குமரி மாவட்டத்திலும் பலரிடம் எஸ்தலின்மேரி ரூ.பல லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

 

Add Comment