துபாய் ஈமான் அமைப்பு நடத்திய புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி

துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சியினை 26.08.2011 வெள்ளிக்கிழமை இரவு தராவீஹ் தொழுகைக்குப் பின்னர் லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) வெகு சிறப்புற நடத்தியது.

புனித லைலத்துல் கத்ர் நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையது எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவின் நன்மைகளை அனைவரும் அடைவதற்காகக் கூடியிருக்கிறோம். அதன் பலனை அனைவரும் பெற வேண்டும். மேலும் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் பல்வேறு நலப்பணிகளை குறிப்பாக நோன்பாளிகளுக்கு தினமும் வழங்கி வரும் நோன்புக் கஞ்சி விநியோகப் பணிகளைப் பாராட்டினார்.

முன்னதாக ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

முஹிப்புல் உலமா கீழை ஏ. முஹம்மது மஃரூப் சீருரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் புனித ரமலான் மாதத்தை அடைந்துள்ள நாம் இறையச்சமுடையவர்களாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

Buy Amoxil justify;”>தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள அமீரக சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சிறப்பு அழைப்பாளர் மௌலவி அல்ஹாபிழ் வி.பி. முஹம்மது இஸ்ஹாக் ஆலிம் பிலாலி எம்.ஏ. அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ரமலான் மாதத்தில் சிறு சிறு விஷயங்களில் தங்களது கவனங்களை சிதறுவதை விட்டும் தடுத்துக் கொண்டு அதிகமதிகம் அமல்கள் செய்யக்கூடியவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

குவைத் பள்ளி இமாம் ஷேக் அல் ஹாபிழ் ஈதி அல் ஹபாரி அவர்கள் அரபு மொழியில் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மிகுந்த ஆர்வமுடன் புனித இரவின் நன்மைகளை அடையக் கூடியிருக்கும் அனைவரையும் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து ஈமான் அமைப்பின் சார்பில் இமாம் அல் ஹபாரி மற்றும் சிறப்பு அழைப்பாளர் மௌலவி முஹம்மது இஸ்ஹாக் ஆலிம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். பள்ளியின் இமாம் அல் ஹபாரி அவர்கள் ரமலான் மாதத்தின் 27 தினங்களில் திருக்குர்ஆனை முழுமையாக தொழுகையில் ஓதி முடித்தமைக்காக மலர்க்கொத்து வழங்கி பாராட்டப்பட்டார்.

ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். நிகழ்வினை மக்கள் தொடர்பு செயலாளர் தொகுத்து வழங்கினார்.

சொற்பொழிவுக்குப் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Add Comment