இனி வரும் காலங்கள் இஸ்லாமியர்களுக்கு இனிமையாக இருக்க வேண்டுமா?

இனி வரும் காலங்கள் இஸ்லாமியர்களுக்கு இனிமையாக இருக்க வேண்டுமா?

அண்மையில் ஒர் இஸ்லாமிய வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

அண்ணன் ………தம்பி …. இருவர்

அண்ணனுக்கு ஐந்து ஆண் மக்கள்…… தம்பிக்கு நான்கு பெண் மக்கள்.

அண்ணனிடம் வினவினேன்….ஹிஹி ……..பெண் பிள்ளை பிறக்கும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து…….. கடைசியில் ஐந்தும் ஆண்மக்களாய்

தம்பியிடம வினவினேன்….ஹிஹி ……..ஆண் பிள்ளை பிறக்கும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து…….. கடைசியில் நான்கும் பெண்மக்களாய்

இஸ்லாம் என்பது எல்லா கொள்கைகளையும் உள்ளடக்கிய மார்க்கம்

அல்லாஹ் நான்கு திருமணங்களை முடிக்க அனுமதித்திருக்கிறான்.

யாருக்கு …….. யாருக்கு அந்த நால்வரையும் சரிசமமாக நடத்த தகுதி உள்ளதோ (பொருளாதார ரீதியிலும் உடல்ரீதியிலும் சக்தி பெற்றிருக்கிறாரோ அவருக்கு)

இல்லையென்றால் ஒரே ஒரு திருமணம் தான் அனுமதிக்கப்பட்டது.

நபியவர்கள் சொன்னார்கள்……..

யாருக்கு சக்தி (பொருளாதார ரீதியாக (உடல்ரீதியாக) இருக்கிறதோ அவர்கள் திருமணம் செய்யுங்கள்

யாருக்கு சக்தி (பொருளாதார ரீதியாக (உடல்ரீதியாக) இல்லையோ அவர்கள் நோன்பு வைத்துக் கொள்ளுங்கள் என்று (இச்சையை தவிர்க்க)

அதிகம் பிள்ளை பெறக்கூடிய பெண்ணைத் திருமணம் செய்யுங்கள்

அதிகம் பிள்ளைகளைப் பெறுங்கள்..மறுமையின் என் கூட்டத்தினர் மிகுதமாக இருக்க வேண்டும் (இறைவன் முன்)   நபியவர்கள் சொன்னார்கள்

ஆனால் அதே நபியவர்கள்

குடும்பக்கட்டுப்பாட்டை ( கருத்தடையை)  அனுமதிக்கும் வண்ணம் “அஸல்“ செய்து கொள்ளவும் அனுமதித்தார்கள்…….

உங்கள் பிள்ளைகளை வறுமையில் (சொத்து சுகம் தேடி வைக்காமல்) நிராதரவாக விட்டுவிடாதீர்கள் என்றும் கூறினார்கள்

இன்றைக்கு நமது சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கி இருக்கிறது.

இதற்கு முக்கியக்காரணம் வருமானத்திற்கும் பொருளாதாரத் தகுதிக்கும்  மீறி அதிக குழந்தைகளைப் பெற்று அவற்றிற்கு நல்ல கல்வி Buy Doxycycline தர முடியாத தால் இன்றைக்கு அந்தப்  பிள்ளைகள்  தற்போதுள்ள உலகில் மற்ற மத த்தவர்களோடு பதவிகளுக்கு  போட்டி போட முடியாத நிலை நிலவுகிறது.

அண்மையில் ஒரு பதவிக்கான நேர்காணல்  நான் அதில்

பிபிஏ படித்த இஸ்லாமிய இளைஞர் அவர்

அவரிடம் என் மேலாளர் கேள்வி கேட்டார்

Why did you leave your previous job?

I am leaved…………. இது அந்த இளைஞர் சொன்ன பதிலின் தொடக்கம்….இவருக்கு எப்படி வேலை கிடைக்கும். இந்த இளைஞரை இந்த நேர்காணலுக்கு நான் தான் அழைத்து வந்தேன் முஸ்லிம் என்பதால் எப்படியாவது பதவியில் புகுத்திடலாம் என்று.

எனக்கு தெரிந்த ஒரு கிறித்தவர் அவருக்கு சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் சொந்த வீடு உள்ளது ஆனால் அதை விட்டு விட்டு வாடகைக்கு எக்மோரில் ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கிறார். ஏன் என்று கேட்டேன்.  வண்ணாரப்பேட்டை மற்றும அதைச் சுற்றியுள்ள வடசென்னை ஏரியாவில் தகுதியான நல்ல பள்ளிகள் கிடையாது. எக்மோர் மற்றும் ஆயிரம்விளக்கு போன்ற பகுதிகளில் தான் சிறந்த கல்விக்கூடங்கள் உள்ளன (எழும்பூரில் தான் டோன்போஸகோ போன்ற பள்ளிகள் உள்ளன ஆகவே என் பிள்ளைகளின் படிப்பு கருதி இங்கு வாடகை வீட்டில் இருக்கிறேன் என்றார்

மாற்று மதத்தவர்கள் கல்விக்கு தரும் முன்னுரிமையப் பாருங்கள்.  அதிக வாடகை தந்து எக்மோரில் இருக்கிறார்கள்….சொந்த வீட்டை விட்டுவிட்டு

பிராமணர்களை நாம் எடுத்துக் கொண்டால் அவர்களில இரண்டு பிள்ளைக்கு மேல் பெறுபவர்கள் மிக மிக சொற்பம். அதிகபட்சம் ஒரு பிள்ளை தான் பெறுவார்கள் ……… அநதப் பிள்ளைக்கு நல்ல கல்வி தருவார்கள் அதனால் தான் எல்லா பிராணமர்களும் உயர்ந்த பதவிகளில் பலர் வெளிநாடுகளில் பணி புரிவதைக் காணுகிறோம்.

குறைவாகப் பெற்றக் கொண்டு நல்ல பள்ளியில் அதிகமாக காசு செலவு செய்து படிக்க வைக்கிறார்கள்

படிப்பதற்கு தேவையாக எல்லா உபகாரங்கள்…. புத்தகங்கள் தனியாக  ஸ்ட்டி ரும் கம்ப்யுட்டர் சிறப்பு பயிற்சி ( டியுஷன்) என்று எல்லாம தருகிறார்கள் பிள்ளைகள் கல்வியில்

ஆபீஸ்பாயாக வாட்ச்மேனாக டிரைவராக உள்ள பிராமணரை யாரேனும் பார்ப்பதுண்டா………..

அல்ஹம்துலில்லாஹ்…….தற்போது நமது இளைய சமுதாயத்தினர் கொஞ்சம் படிக்கிறார்கள்ஆனால் அது போதாது.  நாம் மற்ற மதத்தவர்களோடு ஒப்பீடு செய்யும் போது இரண்டு தலைமுறை பின் தங்கியுள்ளோம் கல்வியில் நாம் என்றால்  மிகையாது.

ஆகவே சக்திக்கு மீறி சகட்டுமேனிக்கு பிள்ளை பெறுவதை இஸ்லாம் வலியுறுத்தவில்லை

குடும்பக்கட்டுப்பாட்டுக்கு கருத்தடைக்கு அனுமதி உண்டு

கருக்கலைப்புக்குத தான் அனுமதி கிடையாது (தாயின் உயிருக்கு ஆபத்து என்றாலோ அல்லது தகுந்த காரணம் தவிர  மற்றபடி பெண் குழந்தை என்பதற்கு வறுமைக்கு பயந்து செய்வதற்கு அனுமதியேயில்லை )

கற்பழிக்கப்பட்ட பெண் கருத்தரித்தால் அதைக் கூட கலைக்க க் கூடாது என்று அறிஞர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் ஏனென்றால் உண்டான உயிரைக் கொல்ல யாருக்கும் அனுமதி கிடையாது அப்படி அதைக் கொன்றால் நாளை இறைவன்  முன் தண்டனை பெற வேண்டி வரும் என்பதால் )

ஆகவே ஒன்றோ இரண்டோ ஆணோ பெண்ணோ பெற்றுக்கொள்ளுங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள்.

கலவிக்கு முக்கியத்துவம் தந்தது போதும்   கொஞ்சம்

கல்விக்கும் முக்கியத்துவம் தருவோம்

இனி வரும் காலங்களெல்லாம் நம் நாட்டிலும் சரி உலக அளவிலும் சரி எதிர்கால சந்ததியினருக்கு போராட்ட காலமாக இருக்கும்.

அந்தப் போராட்ட காலத்தில் முஸ்லிம் பிள்ளைகள் நன்றாகப் படித்தவர்களாக இல்லாதபட்சத்தில்……..

?????????????????????????????????????????????????

ஆகவே இஸ்லாமியர்களே இளைஞர்களே……. ஆண்பிள்ளை வேண்டும் பெண்பிள்ளை வேண்டும் என்று அளவுக்கதிகமாக பெற்றுக்கொள்ளாதீர்கள்

நல்ல கல்வியறிவு தருவதன் அவசியம் கருதி ஒன்றிரண்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

Add Comment