குற்றால அருவிகளில் மிதமான தண்ணீர்

குற்றால அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது.

குற்றாலத்தில் ஆர்ப்பாட்டமாக துவங்கிய சீசன் தற்போது அருவிகளில் தண்ணீர் குறைந்து சீசன் டல் அடித்துள்ளது. குற்றாலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் சாரல் மழை காரணமாக மெயின் அருவியில் அதிகளவில் தண்ணீர் விழத் துவங்கியது.

ஆனால் நேற்று காலையில் வெயில் அடித்ததால் மெயின் அருவியில் தண்ணீர் குறைந்தது. ஆண்கள் பகுதியில் Buy Cialis அதிகளவிலும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுந்தது. பெண்கள் பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஐந்தருவியில் 3 கிளைகளில் மிதமாக தண்ணீர் விழுந்தது. புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் சுமாராக விழுந்தது. இங்கும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் இதமான தென்றல் காற்று வீசியது. இரவு மலைப்பகுதியில் லேசான சாரல் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.

Add Comment