3 பேரை மன்னிக்க வேண்டியவர் சோனியா தான்: ப.சிதம்பரம் மறுபரிசீலனை செய்யச்சொல்லலாம்: தா.பா.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே நேற்று 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.

 

உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்,

இந்த வழக்கில் 21 ஆண்டுகள் சிறையில் இந்த இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை கழித்த பிறகு இப்போது தூக்கு தண்டனை என்று அவர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி இருப்பது, சட்டப்படி நியாயமாகவும் தோன்றவில்லை. மனிதாபிமானத்தோடு பார்த்தாலும் ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை.

தாயுள்ளத்தோடு இதனை மன்னிக்க வேண்டியவர் சோனியாகாந்திதான். ஏனென்றால், பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், அவர் இந்தியாவின் ஆளுகின்ற கட்சியின் தலைவர் என்ற முறையில் அவர் குடியரசு கட்சி தலைவருக்கு இதை மறுபரிசீலனை செய்யுங்கள், மரண தண்டனையை நிறுத்துங்கள் என்று அவர்தான் கூறவேண்டும். Buy Ampicillin இன்னொருவர் அதற்கு அடுத்தாற்போல் சட்டப்படி கூறவேண்டுமென்றால், நம்முடைய தமிழ்நாட்டை சேர்ந்த மந்திரி ப.சிதம்பரம் இதை மறுபரிசீலனை செய்யச்சொல்லி கேட்கலாம்.

அவர்களை காப்பாற்றிவிட முடியும் என்ற ஒரு துளி நம்பிக்கை என்னிடம் இன்றைக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கை வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சகலரும் சேர்ந்து போராடுவோம். இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.

Add Comment