தற்காலிக பஸ்ஸ்டாண்டில் பயணிகள் நிழற்குடை : நகராட்சி தலைவர் உறுதி

தென்காசி தற்காலிக பஸ்ஸ்டாண்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் நகராட்சி தலைவர், கமிஷனர் கூறினர்.

தென்காசி நகராட்சியின் அவசர கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் கோமதிநாயகம் தலைமை வகித்தார். நகராட்சி online pharmacy no prescription கமிஷனர் செழியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

ராமராஜ்: 1வது வார்டு ஜமாலியா நகரில் விரிவாக்க கட்டணம் விதிக்கப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்களும் செலுத்தி விட்டனர். எனவே ஜமாலியா நகரில் தார் ரோடு போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புதிய பஸ்ஸ்டாண்டில் நவீன குளியலறை வசதி அமைக்கப்பட வேண்டும்.

ராமகிருஷ்ணன்: தென்காசி மேலமாசிவீதி, வடக்கு மாசிவீதியில் தற்காலிக பஸ்ஸ்டாண்ட் செயல்படுகிறது. இங்கு டவுன் பஸ்கள் வந்து செல்வதால் பொதுமக்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே தற்காலிக பஸ்ஸ்டாண்டில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

தலைவர், கமிஷனர்: தற்காலிக பஸ்ஸ்டாண்டில் பயணிகள் நிழற்குடை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமகிருஷ்ணன்: நகராட்சி புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் நகராட்சி கமிஷனர், தலைவருக்கு தனி அறை கட்டப்படுவது போன்று கவுன்சிலர்களுக்கு தனி அறை கட்டப்பட வேண்டும்.

கமிஷனர்: தலைவர், துணைத் தலைவருக்கு சட்டப்படி தனி அறை கட்ட முடியாது. இருப்பினும் கவுன்சிலரின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்.

நாகூர்மீரான்: அஜண்டா காலதாமதமாக வந்துள்ளது. இதற்கு என்ன காரணம். சொர்ணபுரம் மேட்டு தெரு பகுதி தொழிற்சாலை பகுதி என இருப்பதால் வீட்டு மனை வாங்குவதற்கு அதிகளவில் பத்திர செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இங்கு குடியிருப்பு வீடுகள் நிறைந்துள்ளது. எனவே இப்பகுதியை தொழிற்சாலை பகுதி என்று இருப்பதை குடியிருப்பு பகுதியாக மாற்றி தர வேண்டும்.

கமிஷனர்: அரசுக்கு கோரிக்கை விடுவித்து அரசு ஆணை பெற வேண்டும்.

தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது என தலைவர் கோமதிநாயகம் அறிவித்து விட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியே புறப்பட்டார். அப்போது வக்கீல் உடை அணிந்து வந்த கவுன்சிலர் ராசப்பா, “யுவர் ஆனர், எனக்கு அஜண்டா ஏன் லேட்டாக கொடுக்கப்பட்டது. நான் எனது வார்டு பிரச்னை பற்றி பேசுவதற்கு முன்பே கூட்டம் முடிந்து விட்டதே’ என ஆதங்கப்பட்டு கூறினார்.

Add Comment