பி.இ. ரேங்க் சரிதானா? தவறு இருந்தால் உடனே தெரிவிக்கவும்

மாணவர்கள் தங்களது பி.இ. ரேங்க் சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அது பற்றி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உடனே கடிதம் மூலமாகவோ அல்லது 044- 22358265/6/7/8 ஆகிய எண்களிலோ தெரியப்படுத்தலாம்.

2010-11-ம் ஆண்டு பி.இ. ரேங்க் பட்டியல் www.annauniv.ed என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்து மாணவர்கள் தங்களது ரேங்க் எது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மறுகூட்டல்: பிளஸ் 2 விடைத்தாள் மறு-கூட்டல் / மறு-மதிப்பீடு போன்றவற்றால் மதிப்பெண் மாற்றம் பெறும் மாணவர்கள் அது குறித்து உடனே அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அந்த மதிப்பெண்ணுக்கேற்ப அந்த மாணவர்களின் பெயர்கள் ரேங்க் பட்டியலில் சேர்க்கப்படும் என்று பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

4,900 விண்ணப்பங்கள் நீக்கம்:

பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்த 1.67 லட்சம் மாணவர்களில் சான்றிதழ்கள் சரியில்லாதது, தேவையான சான்றிதழ்கள் இணைக்கப்படாதது உள்ளிட்ட குறைபாடுகளால் 4,900 விண்ணப்பங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாணவர் சேர்க்கை செயலர் கூறியது:

விண்ணப்பம் நீக்கப்பட்டதற்கான காரணம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய குறைபாடுகளைச் சரிசெய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் அளிக்க வேண்டும். பின்னர் அந்த விண்ணப்பம் அனைத்து தகுதிகளும் பெற்றிருக்குமேயானால் அந்த விண்ணப்பம் தகுதியான விண்ணப்பமாகக் கருதப்படும்.

அசல் சான்றிதழ்களை கலந்தாய்வின்போது மாணவர்கள் கொண்டு வர வேண்டும்.

“கால்’ சென்ட்டர் வசதி:

பி.இ. மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை விளக்குவதற்காக பல்கலைக்கழகத்தில் “கால்’ சென்ட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.

Cialis online style=”text-align: justify;”>044- 22358301/2/3/4/5/6/7/8 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Add Comment