ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்து வாரைச் சேர்ந்த யோகா குரு பாபா ராம் தேவ். பதஞ்சலி ஆசிரமத்தில் யோகா மையம் நடத்தி வருகிறார். டிரஸ்டும் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் மட்டு மின்றி வெளிநாடுகளிலும் யோகா மையங்களை நிறுவி நடத்தி வருகிறார். அன்னா ஹசாரேக்கு முன்னதாக பாபாராம்தேவ் ஊழலை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார். இரவோடு இரவாக போலீஸ்படை சென்று ராம்தேவை அப்புறப்படுத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தியது.
அதன் பிறகு பதஞ்சலி யோகா மையத்தில் உண்ணாவிரதம் இருந்தார். ஒரு வாரத்துக்குப் பின் சமரசம் ஆகி போராட்டத்தை வாபஸ் பெற்றார். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவர் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவு கொடுத்தார். அன்னா ஹசாரே திகார் சிறையில் இருந்த போது காந்தி சமாதி முன்பும், ஜெயில் வாசல் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத் தினார்.

இதற்கிடையே ராம்தேவ் நடத்தும் ஆசிரமத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் வந்ததாகவும், வெளிநாட்டு வங்கிகளில் ராம்தேவ் கோடிக் கணக்கில் பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் ராம்தேவ் நடத்தி வரும் நிறுவனங்களிலும் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. பாபாராம் தேவின் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் அம்லா மற்றும் அலாக் வீரா ஜூஸ் ஆகிய 2 தயாரிப்புகளில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் ரூ.25 கோடி அளவுக்கு விற்பனை நடந்துள்ளது. இதற்கும் அவர் முறையாக கணக்குகளை கையாளவில்லை என்று புகார் கூறப்பட்டது.

இது பற்றி சி.பி.ஐ.யின் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது. வெளி நாடுகளிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி முறைகேடு நடந்து இருப்பதை கண்டு பிடித்தனர். ரிசர்வ் வங்கியும் ராம்தேவின் டிரஸ்டில் பணம் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்து அறிக்கை அனுப்பியது.

இதை தொடர்ந்து ராம்தேவ் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அன்னியச் செலாவணி மோசடி சட்டத்தின் இன்று கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பாபாராம் தேவுக்கு சொந்தமான குட்டித்தீவு ஸ்காட்லாந்து அருகே உள்ளது. இதை அவரது ஆதரவாளர்கள் வாங்கி கொடுத்த தாக கூறப்படுகிறது. இதை தானமாக யாரிடம் online pharmacy without prescription இருந்து பெற்றார் என்றும் விசாரணை நடக்கிறது. இதே போல் மடகாஸ்கர் தீவில் உள்ள சொத்துக்கள் பற்றியும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்துகிறது.

ஏற்கனவே ராம்தேவ் உதவியாளர் பாலகிருஷ்ணா பாஸ்போர்ட் பெற போலியான தகவல்கள் கொடுத்ததாக புகார் எழுந்தது. அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பாஸ் போர்ட் ரத்து செய்யப்பட்டது. இப்போது பாபாராம் தேவ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று ராம்தேவ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Add Comment