ஈராக் சிறையில் ரகசியமாக சுரங்கம் தோண்டி தப்பிய தீவிரவாத கைதிகள்!

ஈராக்கில் சதாம் உசேன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட பிறகு அங்கிருந்து தொடர்ந்து தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே அங்கு அமெரிக்க படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. கைது செய்யப்படும் தீவிரவாதிகள் வடக்கு ஈராக்கில் buy Levitra online உள்ள மொசூல் நகர மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு அடைக்கப்பட்டிருந்த 14 தீவிரவாதிகள் நேற்று தப்பி ஓடிவிட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் ரகசியமாக சுரங்கம் தோண்டி பாதை அமைத்துள்ளனர். அதன் வழியாக தப்பி சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் மத்திய மொசூல் பகுதியில் அல்- பைசா லியாவில் உள்ள சிறையில் இருந்து 35 பேர் தப்ப முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த தகவலை நைனிவே மாகாண பொலிஸ் அதிகாரி மொகமத் அல் கூறியுள்ளார்.

Add Comment