உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று (2ம் தேதி) முதல்விண்ணப்பங்கள் வழங்கலாம் : அமைச்சர் செந்தூர்பாண்டியன் தகவல்

கடையநல்லூர் : “நெல்லை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று (2ம் தேதி) முதல் முதல் விண்ணப்பங்கள் பெறப்படும்’ என அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதிமுக சார்பில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்ப மனுக்கள் பெறுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து இன்று (2ம் தேதி) முதல்) மதியம் 12 மணிக்கு மேல் இரவு 7 மணி வரை மனுக்கள் பெறப்படுகிறது. மேலும் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை காலை 10 no prescription online pharmacy மணி முதல் இரவு 7 மணி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம். தென்காசி வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

 

இந்த தேர்தலில் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 10 ஆயிரம் ரூபாயும், நகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிட விரும்புவோர் 2 ஆயிரம் ரூபாயும், டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 2 ஆயிரத்து 500 ரூபாயும், டவுன் பஞ்., கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 500 ரூபாயும் செலுத்திட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தினை மாநில விவசாய பிரிவு இணை செயலாளர் திருச்செங்கோடு கமலநாதன் பெறுகிறார். இவ்வாறு அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Add Comment