கனமழை: மகாராஷ்டிரத்தில் நிலச்சரிவு-10 பேர் பலி-மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கன மழையால் ஏற்பட்ட நிலசரிவில் 10 பேர் பலியாகியுள்ளனர். கடும் மழை காரணமாக மும்பையில் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையக பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கடற்கரையோர மாவட்டமான ரத்னகிரியில் பெய்த கன மழையால் ஹார்னி கிராமத்தில் Buy Amoxil நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன.

வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 10 பேர் உயிருடன் புதைந்து பலியாயினர். இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை கொட்டி வருவதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பலத்த மழை காரணமாக மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து [^]ம், ரயில் [^] போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பல விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே மேலும் 48 மணி நேரத்துக்கு கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சீனா, மியான்மரிலும் பயங்கர புயல் மழை:

இதற்கியையே சீனா [^]வை கடுமையான புயல் தாக்கியது. தலைநகர் பெய்ஜிங் உள்பட ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதனால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ன.

அதே போல மியான்மர், வங்காள தேசத்திலும் கன மழை பெய்து வருகிறது. வங்காள தேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.

Add Comment