திரிபோலியை மீண்டும் கைப்பற்றுவதாகவும் கடாபியின் மகன் சயிப் அல் இஸ்லாம் அறிவித்துள்ளார்.

கடாபி மறைந்துள்ள நகரை சுற்றி வளைத்துள்ளோம்: கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

லிபியாவில் கடாபி மறைந்துள்ளதாகக் கருதப்படும் பானி வாலிட் நகரை கிளர்ச்சியாளர்கள் சுற்றி வளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நகரானது லிபிய தலைநகர் திரிபோலிக்கு தென்கிழக்கு பகுதியில் 100 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.

கடாபி மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினரில் சிலர் இங்கேயே மறைந்துள்ளதாகக் கிளர்ச்சியாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்நகரைக் கைப்பற்றுவது இலகுவானதல்லவெனவும் இறக்கும் வரை போராடத் தயாராகவுள்ளதுடன், திரிபோலியை மீண்டும் கைப்பற்றுவதாகவும் கடாபியின் மகன் சயிப் அல் இஸ்லாம் அறிவித்துள்ளார்.

அதேவேளை, கடாபியின் மகன்மார்களான சயிப் அல் இஸ்லாம் மற்றும் ஷாடி ஆகியோரிடையே சரணடைவதா, போராடுவதா என்ற முறுகல்நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. buy Ampicillin online

Add Comment