ரயில்வே துறை மெகா ஊழல் ; பணியாளர் தேர்வு வினாத்தாள் விற்று வியாபாரம்: முக்கியப்புள்ளி எங்கே?

நாட்டில் அவ்வப்போது உயர்பொறுப்பில் இருப்பவர்கள் அற்ப காசுக்கு ஆசைப்பட்டு தங்களுடைய பதவியின் பெருமையையும், பொறுப்பையும் குப்பைத்தொட்டியில் தள்ளும் அளவுக்கு போய்விடுகின்றனர். சமீபகாலமாக இந்தியாவில் சி.பி.ஐ.போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்திருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவகவுன்சில் தலைவர் கேதான்தேசாய் கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து இந்த கவுன்சிலை மத்திய அரசு கலைத்துள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலக சுவர் செங்கல்கள் கூட உள்ளே வருவோரிடம் கை நீட்டும் அளவிற்கு லஞ்சம் கொழிக்கத்துவங்கி விட்டது. லஞ்சப்பணத்துடன் அதிகாரிகளிடம் சிக்கிய தூத்துக்குடி மின்வாரிய அதிகாரி ஒருவர் பணத்தை முதலைபோல சவைத்து விழுங்க நினைத்தார், ஆனால் போலீசார் வாயில் கையை போட்டு வெளியே ரத்தக்கறையுடன் எடுத்தது நினைவு இருக்கலாம். இதில் ஒரு இளைப்பாறுதல் தரும் விஷயம் என்னவெனில் உலக லஞ்சம் பெறும் நாடுகளில் 84 வது இடத்தில் இருக்கிறது என்பது online pharmacy without prescription . இதில் தான் நாம் சற்று யோசிக்க வேண்டும் 84 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் வெளிவரும் லஞ்ச விவகாரம் நமது நெஞ்சை சுடு, சுடுவென எரித்து தள்ளுகிறது. டாப் 10 ல் வந்தால் என்னாவது அதற்குத்தான் லஞ்ச வழக்கில் சிக்குவோரை கண்டிக்கும் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்தியாவில் அதிகம் ஊழியர்களை கொண்ட ரயில்வே துறையில் தற்போதைய ஊழல் சற்று வித்தியாசமானது. கடந்த 6 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை 50 ஆயிரம் பதவிகளுக்கான ( அசிஸ்டண்ட் ஸ்டேஷன் மாஸ்டர், அசிஸ்டண்ட் லோகோ பைலட் ) தேர்வில் 16 லட்சம் பேர் எழுதினர். இதில் பணியாளர் நியமனத்தில் ஊழல் செய்தால் தானே சிரமம் என யோசித்த ரயில்வே தேர்வானைய ஊழியர்கள் தேர்வு எழுதும் கேள்வித்தாளை விற்று காசாக்கியுள்ளனர். ஒரு விடைத்தாள் விலை 3. 5 லட்சம் வரை போயிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் புரண்டிருக்கிறது. இது தொடர்பான விஷயம் லீக் ஆகவே சி.பி.ஐ., அதிகாரிகள் டிஐ.ஜி., லஷ்மி நாராயணா தலைமையில் யார் , யார் இதில் ஈடுபட்டுள்ளனர் என மோப்பம் பிடித்து 8 பேரை கைது செய்திருக்கிறது. ஐதராபாத், மும்பை, பெங்களூரு, ராய்ப்பூர், கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களில் உள்ளவர்கள் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்கூறிய நகரங்களில் சி.பி.ஐ., போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ரயில்வே தேர்வானைய வாரிய சேர்மன் மகன் விவேக்பரத்வாஜ், மற்றும் ரயில்வே ஏ.டி.ஆர்.எம்., மற்றும் ஏஜன்டாக செயல்பட்ட 8 பேர் கைது செயய்யப்பட்டு ஜெயிலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இவர்களிடம் இருந்தது லீக் செய்யப்பட்ட கேள்வித்தாள், மற்றும் லேப்டாப், கோடிக்கணக்கில் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 400 பேருக்கு வினாத்தாள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் இருந்து தவணை முறையிலும் பணம் பெறப்பட்டு இதற்கு சூரிட்டியாக அவர்களது ஒரிஜினல் சான்றுகள் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டிருக்கிறார்கள். முழுப்பணம் செட்டில் செய்யப்பட்ட பின்னர் சான்றுகள் திருப்பி வழங்கப்படும் என்ற ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறது. இந்த ஊழல் விவகாரம் வெளியானதும் தேர்வானைய தலைவர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் இந்த ஊழலில் தனது அப்பாவுக்கும் தொடர்பு உண்டு என கைதான தேர்வானைய தலைவர் சர்மாவின் மகன் விவேக் பரத்வாஜ் கூறியுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் இவரும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பலர் சிக்கக்கூடும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ரயில்வே தேர்வு ரத்தாகுமா? : இந்த ஊழல் விவகாரத்தை அடுத்து வரும் 27 ம்தேதி நடக்கவிருக்கும் ஏனைய பதவிகளுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ரயில்வே மூத்த அதிகாரி கூறியதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் கூறியுள்ளது. தேர்வானைய தலைவர் சர்மாவை கைது செய்ய ரயில்வே துறை அமைச்சகம் கிரீன் சிக்னல் தந்தால்தான் முடியும். ரயில்வே துறை அமைச்சர் மம்தா இதில் என்ன பதில் சொல்லபோகிறார்?

Add Comment