போபால் விஷவாயு கசிவு விவகாரம்:அமைச்சரவை குழு ஆலோசனை

போபால் விஷ வாயு கசிவு விவகாரம் குறித்து, மத்திய அமைச்சரவை குழு நேற்றும் விரிவான ஆலோசனை நடத்தியது. நிலுவையில் உள்ள சட்ட பிரச்னைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

போபால் விஷ வாயு கசிவு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் தாக்கம் குறித்தும், இதில் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, அமைச்சரவை குழுவை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார். உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான இந்த குழு, பத்து நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பிரதமர் உத்தரவிட்டார்.இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சரவை குழு நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. நேற்றும் இந்த ஆலோசனை நடந்தது.

இதுகுறித்து அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:நேற்று நடந்த கூட்டத்தில் போபால் விஷ வாயு விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள சட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்து பிரச்னைகளுக்கும், தற்காலிகமாக ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் விவரம், பிரதமரிடம் தாக்கல் செய்யப்படவுள்ள அறிக்கையில் இடம் பெறும். அந்த விவரம் என்ன என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாது. நாளையும் அமைச்சரவை குழுவின் ஆலோசனை நடக்கவுள்ளது.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.நேற்றைய கூட்டத்தில் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டோரின் சுகாதார பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

வாய் திறந்தார் அர்ஜுன் சிங்:இதற்கிடையே, விஷ வாயு கசிவுக்கு காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சன் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற விவகாரம் குறித்து, அப்போதைய ம.பி., முதல்வர் அர்ஜுன் சிங், தற்போது முதல் முறையாக வாய் திறந்துள்ளார். இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:வாரன் ஆன்டர்சனை அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல நான் தான், அனுமதி அளித்தேன் என, தவறான தகவல் பரப்பப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஒருவரை அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல அனுமதி அளிப்பது என்பது முதல்வர் பதவிக்கு அப்பாற்பட்ட விஷயம். வாரன் ஆன்டர்சன் தப்பிச் சென்ற விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.இவ்வாறு அர்ஜுன் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் கூறுகையில்,””இந்த விவகாரம் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் மத்திய அமைச்சரவை குழு ஆய்வு செய்து வருகிறது. இதில், காங்கிரஸ் சார்பாக கருத்து தெரிவிக்க எந்த விஷயமும் இல்லை,” Buy cheap Bactrim என்றார்.

இதற்கிடையே, அர்ஜுன் சிங் தனது வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் எழுதி வருவதாகவும், ஆன்டர்சன் தப்பிச் சென்ற விவகாரம் குறித்து அதில் முழு விவரங்களை எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருண் பாய்ச்சல்:போபால் விஷ வாயு கசிவு விவகாரம் குறித்து பா.ஜ., செயலர் வருண் கூறுகையில்,””ஆன்டர்சன் தப்பிச் சென்ற விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து, நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால், இந்த சதித் திட்டத்தில், தனக்குள்ள தொடர்பில் இருந்து காங்கிரஸ் தப்பிக்க முடியாது,” என்றார்.

Add Comment