உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் போட்டி 5ம் தேதி முதல் மனுக்களை அளிக்கலாம்.

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் வரும் 5ம் தேதி முதல் விண்ணப்ப மனுக்களை அளிக்கலாம். இதுகுறித்து மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் இதற்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று பொது செயலாளர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் வரும் 5ம் தேதி முதல் வரும் 12ம் தேதி வரை நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தில் இதற்கான மனுக்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மனு கட்டணம் 10 ரூபாய் ஆகும். மாநகராட்சி மேயர் பதவிக்கு 20 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி கவுன்சிலருக்கு 5 ஆயிரம் ரூபாய், நகராட்சி தலைவர் பதவிக்கு 10 buy Amoxil online ஆயிரம் ரூபாய், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 2 ஆயிரம் ரூபாய், டவுன் பஞ்., கவுன்சிலர் பதவிக்கு 500 ரூபாய், மாவட்ட பஞ்., கவுன்சிலர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாய், பஞ்.,யூனியன் கவுன்சிலர் பதவிக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர்கள் மற்றும் பெண்களுக்கு இதில் பாதி தொகை கட்டணமாக செலுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் வரும் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகளிடம் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை விண்ணப்ப மனுவை பெற்று பூர்த்தி செய்து உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட திமுக அலுவலகத்தில் விண்ணப்ப மனுக்களை சமர்ப்பிக்க இயலாதவர்கள் மட்டும் சென்னை அண்ணா அறிவாலய தலைமை கழகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட திமுக செயலாளர் தெரிவித்துள்ளார்

Add Comment