நிலப் பறிப்பு புகார்கள் ஜோடிக்கப்படுகின்றன: ஸ்டாலின்

சேலம், செப். 2: தமிழகத்தில் நிலப் பறிப்பு புகார்கள் ஜோடிக்கப்படுகின்றன என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரயில் மூலம் சேலத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த அவர், அங்கிருந்து சேலம் மத்திய சிறைக்கு காரில் சென்றார். 

நிலப் பறிப்பு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருச்சி துணை மேயர் மு.அன்பழகன், திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் நடேசன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: 

நிலப் பறிப்பு வழக்குகளில் திமுகவினரை ஜெயலலிதா தொடர்ந்து கைது செய்து வருகிறார். தமிழகத்தில் உள்ள எல்லா சிறைகளுக்கும் நான் சென்று பார்க்கும்படியான பெரிய வேலையை எனக்கு அவர் வைத்துவிடுவார் போல் தெரிகிறது. அந்த அளவுக்கு முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பொய் வழக்குகளில் தொடர்ந்து கைது செய்து சிறையில் தள்ளி வருகின்றனர். 

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும். சமாளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கைது நடவடிக்கை தொடர்கிறது. ஆனால், இதை சட்ட ரீதியாக நீதிமன்றத்தை அணுகி நாங்கள் சமாளிப்போம். 

உள்ளாட்சித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை திமுக தொடங்கியுள்ளது. அதன்படி மாவட்டம் வாரியாகச் செல்லும் கட்சிப் பிரதிநிதியிடம் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனுத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவின் இந்தக் கைது நடவடிக்கைகளால் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு நிச்சயம் பாதிக்காது. அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுக தலைவர் கருணாநிதி கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிப்பார். 

சேலத்தில் தேமுதிக எம்.எல்.ஏ. மீது நிலப் பறிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது Buy Amoxil குறித்து கேட்கின்றீர்கள். தமிழகத்தில் அதிமுக, தேமுதிக பிரமுகர்கள் மீது பல்வேறு நிலப் பறிப்பு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியுள்ளேன். இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார் மு.க.ஸ்டாலின். 

அன்று மாலை சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், திமுகவை அழிக்கும் முயற்சியிலேயே பொய் வழக்குகள் போடப் படுவதாகவும், ஆனால் சிறைக்கு செல்வதே திமுகவினருக்கு பெருமை என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். 

Add Comment