எளிதான வெற்றியை நோக்கி பிரேசில்: இன்று ஐவரி கோஸ்ட்டுடன் மோதல்

உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பிரேசில், ஐவரி கோஸ்ட் அணிகள் மோதுகின்றன. இதில் உலகின் “நம்பர்-1′ அணியான பிரேசில் மிக எளிதாக வெல்லும் எனத் தெரிகிறது.
தென் ஆப்ரிக்காவில் 19வது <உலக கோப்பை கால்பந்து தொடர் Levitra online நடக்கிறது. இதில் இன்றைய “ஜி’ பிரிவு ஆட்டத்தில் வலிமை வாய்ந்த பிரேசில் அணி, தரவரிசையில் 26வது இடத்திலுள்ள ஐவரி கோஸ்ட் அணியை சந்திக்கிறது.
ஐந்துமுறை உலக கோப்பை வென்ற பிரேசில் அணி, ஆப்ரிக்க கண்டத்திலும் கோப்பை வெல்லும் நோக்கத்துடன் களமிறங்கியது. இதற்கேற்ப முதல் போட்டியில் வட கொரியாவை வீழ்த்தி, வெற்றியுடன் துவக்கியது. இன்று ஐவரி கோஸ்ட்டை வென்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.
இதற்கு முன்னணி வீரர்கள் லூயிஸ் பேபியானோ, ராபின்ஹோ போன்ற முன்னணி வீரர்கள் கைகொடுக்கத் தயாராக உள்ளனர். இவர்களுடன் கோல் கீப்பர் ஜூலியோ சீசர், கடந்த போட்டியில் கோல் அடித்த மைகான், இலானோ இன்றும் அணியின் வெற்றிக்கு உதவலாம்.
முன்னணி வீரர் காகா, கடந்த போட்டியில் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, பாதியில் வெளியேறினார். இதுகுறித்து மற்றொரு வீரர் ராபின்ஹோ கூறுகையில்,”” காகா, எங்களுடைய முக்கியமான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் எப்போதும் சிறப்பாக விளையாடுவார். அடுத்து வரும் போட்டிகளில் எங்களது ஆட்டம் இன்னும் முன்னேற்றம் அடைந்திருக்கும்,” என்றார்.
கவனம் தேவை:
ஐவரி கோஸ்ட் அணியை பொறுத்தவரையில் முதல் போட்டியில், வலிமையான போர்ச்சுகலுக்கு எதிராக “டிரா’ செய்து அசத்தியது. இந்த ஆட்டத்தில் கோல் அடித்து முன்னிலை பெறுவதை விட, எதிரணி வீரர்களை பின் தொடர்ந்து முரட்டு ஆட்டம் ஆடுவதில் தான், ஐவரி கோஸ்ட் அணியினர் முக்கிய நோக்கமாக கொண்டிருந்தனர். இதனால் மஞ்சள் அட்டை பெற்ற முன்னணி வீரர் ஜொகாரா, இன்று கவனமாக விளையாட வேண்டும்.
இவர் தவிர, நடுகள ஆட்டக்காரர் ஜெய்க் டியோட்டி, ஜீன் ஜாக்குஸ் கோசோ, ரொமாரிக், சலோமோன் காலு, அருனா டின்டனே போன்றவர்கள்.

Add Comment