மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அறிவிப்பு

 

புது தில்லி, செப். 4மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் மு.க. அழகிரிக்கு ரூ.30 கோடிக்கு சொத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்களில் கமல்நாத்துக்கு அதிக சொத்துகளும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு குறைந்த அளவு சொத்துகளும் இருப்பது தெரியவந்துள்ளது. அதன் விபரம்:

 

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத்துக்கு ரூ.276.64 கோடி மதிப்பு சொத்துகள் உள்ளன. பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி பெயரில் ரூ.1.8 லட்சம் மதிப்பு சொத்துகளும் அவரது மனைவி பெயரில் ரூ.30 லட்சம் மதிப்பு சொத்துகளும் உள்ளன.

உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்துகளும் அவரது மனைவியின் பெயரில் ரூ.12.80 கோடி மதிப்புள்ள சொத்துகளும் இருக்கின்றன.

 

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு ரூ. 1.8 கோடி மதிப்பு சொத்துகள் உள்ளன. 

மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரிடம் ரூ.12 கோடி மதிப்பு சொத்துகள் இருக்கின்றன. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, தனக்கு ரூ.2.34 லட்சம் மதிப்புள்ள அசையாச் சொத்துகளும் ரூ.4.81 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், முதலீடு ரூ.3 லட்சமும், சேமிப்பாக ரூ.12 லட்சமும் இருப்பதாகக் கூறியுள்ளார். அவரது மனைவிக்கு ரூ. 21 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் கிருஷ்ணா அறிவித்துள்ளார்.

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அமைச்சர் கபில் சிபலுக்கு ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த Lasix No Prescription திமுக அமைச்சர் மு.க. அழகிரிக்கு ரூ. 30 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு ரூ.13.34 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மின்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவுக்கு ரூ.9.11 கோடி மதிப்புள்ள சொத்துகளும்,அவரது மனைவி பெயரில் ரூ.4.77 கோடி மதிப்புள்ள சொத்துகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக தொழில் துறை அமைச்சர் பிரபுல் படேலுக்கு ரூ.33.94 கோடி மதிப்புள்ள சொத்துகளும் அவரது மனைவி பெயரில் ரூ.54.73 கோடி மதிப்புக்கு சொத்துகளும் உள்ளன. பிரபுல் படேலுக்கு ரூ.5.78 கோடி அளவுக்கு கடனும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மூன்று முறை பிரதமர் அலுவலகம் கடிதம் மூலம் வலியுறுத்தி வந்தது. 77 மத்திய அமைச்சர்களில், விலாஸ் ராவ் தேஷ்முக், கிருஷ்ணா தீரத், ஜெயந்தி நடராஜன், ஜிதேந்தர் சிங், எஸ். ஜெகக்ரட்சகன் ஆகிய 5 அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பிரதமரின் சொத்து மதிப்பு ரூ.4.8 கோடி

பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டது. இதன் அடிப்படையில் அவருடைய சொத்து மதிப்பு ரூ.4.8 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் ஓர் அடுக்கு மாடி வீடும், சண்டீகரில் ஒரு வீடும், 150 கிராம் தங்க நகைகளும் மாருதி 800 (1996 மாடல்) கார் ஒன்றும் அவருக்கு சொந்தமாக இருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதை தவிர பிரதமருக்கு சொந்தமாக நிலம் எதுவும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Add Comment