லிபிய தலைநகரில் புரட்சிப் படை தலைவர்கள்

திரிபோலி, செப். 4 லிபியாவில் புரட்சிப் படையினர் வெற்றி பெற்றதை அடுத்து அதன் தலைவர்களில் பெரும்பாலானோர் தலைநகர் திரிபோலிக்கு வந்துள்ளனர்.

லிபியாவின் மறுநிர்மாணத்துக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் online pharmacy no prescription தெரிவித்துள்ளார்.

 

லிபியாவில் அதிபர் மம்மர் கடாஃபிக்கு எதிராக கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வந்த புரட்சி அண்மையில் முடிவுக்கு வந்தது. புரட்சிப்படை மற்றும் அவர்களுக்கு ஆதரவான மேற்கத்திய நாடுகளின் தாக்குதலை கடாஃபி ஆதரவு ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை. கடாஃபி நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் புரட்சியின் போது பென்ஹாசி நகரை தங்கள் மையமாகக் கொண்டு புரட்சிப் படையினர் போரிட்டு வந்தனர். இப்போது தலைநகர் திரிபோலி தங்கள் வசமாகியுள்ளதை அடுத்து புரட்சிப் படையின் தலைவர்கள் தலைநகருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

லிபியாவில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. இடைக்கால அரசின் பாதுகாப்பு அமைச்சர் அகமது தாரத் இது குறித்துத் கூறியது: பெரும்பாலான பாதுகாப்புப் படையினர், போலீஸôர் பணிக்குத் திரும்பியுள்ளனர். நாடு இப்போது இயல்பு நிலையை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது. போரின் போது தலைநகரை விட்டு வெளியேறிய மக்களுக்கும் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். அனைவரும் சேர்ந்து வலுவான லிபியாவை உருவாக்குவோம் என்றார்.

லிபியாவின் தேசிய இடைக்காலக் குழுவின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலில் கூறியது: திரிபோலிதான் எங்கள் தலைநகர். லிபியாவில் இனி ஜனநாயக ஆட்சி நடைபெறும். இதற்கு சர்வதேச சமூகம் அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. எங்கள் குழு அரசியல் நிர்ணய சட்டத்தை வடிவமைக்கும். தேர்தல் முறையாக நடைபெற்று மக்களாட்சி அமையும் என்றார்.

Add Comment