நெதர்லாந்து அசத்தல் வெற்றி: ஜப்பான் ஏமாற்றம்

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், ஸ்னெஜ்டர் சூப்பர் கோல் அடிக்க, நெதர்லாந்து அணி, ஜப்பானை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
தென் ஆப்ரிக்காவில், 19வது “பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று Buy Lasix Online No Prescription நடந்த “இ’ பிரிவு லீக் போட்டியில், உலக ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி, ஜப்பான் (“நம்பர்-45′) அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியின் துவக்கத்தில் இருந்து நெதர்லாந்து அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் கிடைத்த “கார்னர் கிக்’ வாய்ப்பை நெதர்லாந்தின் வான் டெர் வார்ட் வீணாக்கினார். நீண்ட நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த நெதர்லாந்து அணியினரால், ஜப்பான் அணியின் தற்காப்பு வளையத்தை தகர்க்க முடியவில்லை. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியிலும் நெதர்லாந்து அணியினர் அசத்தினர். ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வெஸ்லே ஸ்னெஜ்டர், சூப்பர் கோல் அடித்து நம்பிக்கை தந்தார். ஜப்பான் அணியினர் தங்களுக்கு கிடைத்த ஒரு சில வாய்ப்புகளையும் வீணடித்தனர். ஆட்டநேர முடிவில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக நெதர்லாந்தின் ஸ்னெஜ்டர் தேர்வு செய்யப்பட்டார்.

லீக் போட்டியில் டென்மார்க், ஜப்பான் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்திய நெதர்லாந்து அணி, 6 புள்ளிகளுடன் முதல் அணியாக “இ’ பிரிவிலிருந்து காலிறுதிக்கு முந்தைய “ரவுண்ட் ஆப்- 16′ சுற்றுக்கு முன்னேறியது. முதல் லீக் போட்டியில் காமரூன் அணியை வீழ்த்திய ஜப்பான் அணி (3 புள்ளி), அடுத்த சுற்றுக்கு தகுதிபெற, வரும் 24ம் தேதி ரஸ்டன்பர்க் நகரில் நடக்கும் கடைசி லீக் போட்டியில், டென்மார்க் அணியை வீழ்த்த வேண்டும்.

Add Comment