விலைவாசியைக் குறைக்க அரசு முயற்சி: பிரணாப்

கொல்கத்தா, செப். 4: விலைவாசியைக் குறைப்பதற்காக, நாட்டில் வேளாண் உற்பத்தியைப் பெருக்க அரசு முயற்சித்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது குறித்து கூறியது: உணவுப் பொருள் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தை (10.05) எட்டியுள்ளது கவலையளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பது வழக்கம்தான். ஆனால் ஒரு சில உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

 

ஒட்டுமொத்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி பணக் கொள்கையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பலனளித்து வருகின்றன. வரும் வாரங்களில் மேலும் சில புதிய யுத்திகள் கையாளப்படும் என்றார் முகர்ஜி.

ரிசர்வ் வங்கி வரும் செப்டம்பர் 16-ல் தனது பணக்கொள்கையை மறு ஆய்வு செய்யவுள்ளது. இதில் மீண்டும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என்றே தெரிகிறது.

கடந்த Buy Cialis 5 மாதங்களில் இல்லாத அளவு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 10.05 சதவீதமாக உயர்ந்தது. உணவுப் பொருள்களின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. வெங்காயம், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை அதிகரித்ததே உணவுப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்ட முக்கியக் காரணம்.

Add Comment