பரிதாப நிலையில் ஆஸ்திரேலியா: கானாவுடன் “டிரா’ செய்தது

ஆஸ்திரேலியா, கானா அணிகள் மோதிய உலக கோப்பை கால்பந்து லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் “டிரா’ ஆனது. இதையடுத்து “டி’ பிரிவில் முதலிடம் பெற்ற கானா அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் நிலைமை பரிதாபமாக உள்ளது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று “டி’ பிரிவில் நடந்த லீக் போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 20வது இடத்தில் <உள்ள ஆஸ்திரேலிய அணி, கானாவை(32வது இடம்) எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் “பிரீகிக்’ வாய்ப்பு மூலம் ஆஸ்திரேலியாவின் பிரஸ்கியானோ அடித்த பந்தை, கானா கோல்கீப்பர் கிங்சன் வெளியே தள்ளினார். அதனை அப்படியே பெற்ற ஹால்மென், சூப்பராக கோல் அடிக்க… ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் “கோல் லைனில்’ வைத்து பந்தை தடுத்து மாபெரும் தவறு செய்தார் ஆஸ்திரேலியாவின் ஹாரி கீவெல். இதையடுத்து நடுவரால் “ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதற்காக வழங்கப்பட்ட “பெனால்டி கிக்’ வாய்ப்பில் கானா வீரர் அசமாவோ கியான், அருமையாக கோல் அடிக்க, போட்டி 1-1 என Buy cheap Doxycycline சமநிலைக்கு வந்தது. கீவெல் இல்லாத நிலையில் 10 பேருடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்க முடியாமல் திணறியது. முதல் பாதி 1-1 என்ற கணக்கில் முடிவுக்கு வந்தது.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கடுமையாக போராடின. கானா கோல்கீப்பர் கிங்சன் தொடர்ந்து துடிப்பாக செயல்பட, ஆஸ்திரேலியாவின் முயற்சிகள் வீணாகின. ஆட்டத்தின் கடைசி கட்டங்களில் கானா அணியினர் நடத்திய தாக்குதலும் பலன் அளிக்கவில்லை.

இறுதியில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் “டிரா’ ஆனது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது<. தனது அடுத்த போட்டியில் செர்பியாவை 3 கோல் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதே நேரத்தில் கானா அணியிடம் ஜெர்மனி தோல்வி அடைய வேண்டும். இவை இரண்டும் நடந்தால் மட்டுமே ஆஸ்திரேலியா காலிறுதிக்கு முந்தைய “ரவுண்ட் ஆப் 16′ சுற்றுக்கு முன்னேற முடியும்.

Add Comment