டென்மார்க் அசத்தல் வெற்றி! * காமரூன் “அவுட்’

உலக Lasix No Prescription கோப்பை கால்பந்து லீக் போட்டியில் டென்மார்க் அணி, காமரூனை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இரண்டாவது தோல்வியை சந்தித்த காமரூன் அணி, தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று பிரிடோரியாவில் நடந்த “இ’ பிரிவு லீக் போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 19வது இடத்தில் உள்ள காமரூன் அணி, டென்மார்க்கை(36வது இடம்) எதிர்கொண்டது.
இடோ அசத்தல்:
இப்போட்டியின் துவக்கத்தில் காமரூன் அணியினர் அசத்தலாக ஆடினர். ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் இந்த அணியின் கேப்டன் சாமுவேல் இடோ அருமையான கோல் அடிக்க, 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க டென்மார்க் அணியினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் ரொமேதால் கொடுத்த “பாசை’ பெற்ற பெண்ட்னர் அசத்தலாக கோல் அடிக்க, போட்டி 1-1 என்ற சமநிலை எட்டியது. 45வது நிமிடத்தில் இடா, கோல் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.
டென்மார்க் எழுச்சி:
இரண்டாவது பாதியில் டென்மார்க் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் இந்த அணியின் ரொமேதால் ஒரு கோல் அடிக்க 2-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பின் காமரூன் வீரர்கள் அபுபக்கர்(82வது நிமிடம்), இட்ரிசோ(90வது நிமிடம்) பொன்னான வாய்ப்பை வீணாக்கினர். இறுதியில் டென்மார்க் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 3 புள்ளிகளை முழுமையாக பெற்றது. இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய “ரவுண்ட்-ஆப் 16′ சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. ஏற்கனவே ஜப்பானிடம் வீழ்ந்த காமரூன் அணி, இரண்டாவது தோல்வியை சந்தித்ததால், தொடரில் இருந்து வெளியேறியது.

Add Comment