அமெரிக்க தூதரிடம் நாராயணன் கூறியது என்ன? விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட டேவிட்கோல்மென் ஹெட்லியை நாடு கடத்தி கொண்டுவர இந்தியா ஆர்வம் காட்டவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக ‌செயல்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட்கோல்மென் ஹெட்லி மீது அமெரிக்க கோர்டில் வழக்குப்பதிவு செய்யபப்ட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய இணைதளமான விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவலில் கூறியுள்ளதாவது:மும்பை தாக்குதலில் லஷ்கர் தொய்பா அமைப்புக்கு உதவியதாக ஹெட்லி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை அமெரிக்க கோர்டில் நடந்துவருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதியன்று இது குறித்து இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இருந்த திமோதி ரோமர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.‌கே. நராயணனிடம் தெரிவித்தார். அதற்கு, நாராயணன் ஹெட்லியை மும்பை தாக்குதல் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வர ஆர்வமில்லை. Buy Viagra Online No Prescription இந்த நேரத்தில் ஹெட்லியை நாடு கடத்தி வருவது கடினம் தான். பெரும் சிக்கல் ஏற்படும் என கூறினார். இவ்வாறு விக்கீலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

நாராயணன் விளக்கம் : விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் குறித்து பேட்டியளித்துள்ள எம் கே நாராயணன், விக்கீலீக்ஸ் தகவல் குறித்து அமெரிக்காவிடம் தான் கேட்க வேண்டும். ஹெட்லியை நாடு கடத்தி கொண்டு வருவதில் தீவரமாக இருந்தோம். அதிகாரிகளுக்கு மத்தியிலான் பேச்சுக்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஹெட்லியை நாடு கடத்துவதில் இந்தியா ஆர்வமாக இருந்தது. தீவிரமாக செயல்பட்டோம் என கூறினார்


 

Add Comment