மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு பெரிய தொழில் நிறுவனங்கள் வங்கிகள் நடத்த அனுமதிப்பதா?

புதுடெல்லி : பெரிய வர்த்தக நிறுவனங்களை வங்கிகள் நடத்த அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பெரிய வர்த்தக நிறுவனங்கள் வங்கிச் சேவையை நடத்த அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது முட்டாள்தனமானது. இந்த முடிவால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய இழப்புகள் ஏற்படும். இந்திரா காந்தியின் வங்கிகள் தேசியமய கொள்கைக்கு எதிரான இந்த திட்டம், வங்கித்துறையை பெரிய சிக்கலில் தள்ளிவிடும்.

இந்த முடிவை மார்க்சிஸ்ட் கடுமையாக எதிர்க்கிறது. அதோடு, இந்த திட்டத்தை எதிர்க்கும்படி அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள், மக்கள் இயக்கங்களையும் கேட்டுக் கொள்வோம். வங்கிகள் தேசியமயம் ஆக்கப்படுவதற்கு முன்பு, பெரிய வர்த்தக நிறுவனங்களின் பிடியில்தான் வங்கிகள் இருந்தன.

வங்கிகளை நடத்த பெரிய வர்த்தக நிறுவனங்களை அனுமதித்தால், வங்கி மூலம் திரட்டப்படும் நிதியில் பெரும் தொகையை தனது சொந்த தொழில் திட்டங்களுக்குதான் அவை பயன்படுத்தும். தாராளமய கொள்கைக்குப் பிறகு தனியார் வங்கிகளுக்கு buy Viagra online அனுமதி அளிக்கப்பட்டன. அப்போது கூட, பெரிய வர்த்தக நிறுவனங்கள் இந்த உரிமத்தை பெற தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கரத் கூறினார்.

Add Comment