இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,: பைனலில் இலங்கையுடன் மோதல்

ஆசிய கோப்பை லீக் போட்டியின் பரபரப்பான கடைசி ஓவரில் ஹர்பஜன் சிக்சர் விளாச, இந்திய அணி “திரில்’ வெற்றி பெற்றது. இப்போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த பாகிஸ்தான் அணி, தொடரில் இருந்து வெளியேறியது. வரும் 24ம் தேதி நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் “டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, “பேட்டிங்’ தேர்வு செய்தார்.
சல்மான் அபாரம்:
பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் பர்கத், சல்மான் பட் துவக்கம் கொடுத்தனர். இம்ரான் பர்கத் 25 ரன்களில் வெளியேறினார். இந்தியாவுக்கு எதிராக எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சல்மான் பட், நேற்றும் அசத்தினார். சர்வதேச அரங்கில் 14 வது அரைசதம் (74) கடந்த இவர், ரன் அவுட்டானார்.
“மிடில் ஆர்டர்’ சரிவு:
சோயப் மாலிக் 39 ரன்கள் எடுத்தார். பின் வந்த உமர் அக்மல் (21), உமர் அமின் (5) விரைவில் திரும்ப, பாகிஸ்தான் அணிக்கு “மிடில் ஆர்டரில்’ சிக்கல் ஏற்பட்டது. ஹர்பஜன் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்த அப்ரிதி (32), பிரவீண் குமார் வேகத்தில் வீழ்ந்தார்.
கம்ரான் ஆறுதல்:
ஒரு முனையில் விக்கெட் சரிந்த போதும், மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை தொடர்ந்தார் கம்ரான் அக்மல். பிரவீண் ஓவரில் தொடர்ந்து சிக்சர், பவுண்டரி விளாசி அரைசதம் கடந்த இவர் (51), அடுத்த பந்திலேயே அவுட்டானார். பின்வரிசையில் டெயிலெண்டர்கள் ஏமாற்ற, பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய தரப்பில் பிரவீண் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
சேவக் சொதப்பல்:
எட்டிவிடும் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி மீண்டும் துவக்கம் கொடுத்தது. வழக்கத்துக்கு மாறாக ஆமை வேகத்தில் ஆடிய சேவக் 10 ரன்னில் (32 பந்துகள்) வெளியேறினார். அடுத்து வந்த கோஹ்லி (18) நிலைக்க வில்லை.
காம்பிர் அபாரம்:
கடந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்பிர், நேற்றும் ஜொலித்தார். கேப்டன் தோனியுடன் இணைந்து சிறப்பாக விளையாடிய இவர் சர்வதேச அரங்கில் 21வது அரைசதம் கடந்தார். இவர் 83 ரன்களுக்கு அவுட்டானார்.
தோனி அரைசதம்:
தோனியுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா (22) இத்தொடரில் இரண்டாவது buy Viagra online முறையாக எல்.பி.டபிள்யு., முறையில் திரும்பினார். அபார ஆட்டத்தை தொடர்ந்த தோனி, சர்வதேச அரங்கில் 36வது அரைசதம் அடித்தார். இவர் (57) சோயப் மாலிக் சுழலில் சிக்கி வெளியேற, இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. ரவிந்திர ஜடேஜா (6), நேற்றும் கைவிட்டார். அடுத்து வந்த ஹர்பஜன், அக்தரின் பந்தில் சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார்.
இமாலய சிக்சர்:
மறுபக்கம் ரெய்னாவும் அக்தர், அஜ்மல் பந்தில் சிக்சர் அடிக்க, கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரெய்னா ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் ரெய்னா (34) ரன் அவுட். அடுத்த இரண்டு பந்தில் பிரவீண் 3 ரன் எடுக்க, கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் ஆமெர் பந்தை எதிர்கொண்ட ஹர்பஜன், ஒரு இமாலய சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 49.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. லீக் சுற்றில் இலங்கை, இந்தியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான் அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
ஆட்ட நாயகனாக காம்பிர் தேர்வு செய்யப்பட்டார்.
பவுலர்கள் அபாரம்
இந்தியாவுக்கு எதிராக நேற்று பாகிஸ்தான் அணி, 29 ஓவரின் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இந்த நிலையில் இந்திய பவுலர்கள் அபாரமாக செயல்பட்டனர். 17 பந்துகள் இடைவெளியில் பாகிஸ்தானின் 3 விக்கெட்டை இந்திய வீரர்கள் வீழ்த்தினர். இதனால் தான் பாகிஸ்தானை 267 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது.
சேவக் காயம்?
சமீபத்தில் தோள்பட்டை காயத்திலிருந்து மீண்டு வந்த சேவக், நேற்று ரன்னுக்காக ஓடும் போது தவறி விழுந்தார். இடுப்புபகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக, முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. பின் இவருக்கு ரெய்னா, ரன்னராக வந்தார். இதனால் அடுத்த போட்டியில் இவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கம்ரான்-காம்பிர் மோதல்
நேற்று அஜ்மல் பந்தை சந்தித்த காம்பிரை, “கேட்ச்’ செய்ததாக விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் பலமாக முறையிட்டார். ஆனால் அம்பயர் பில்லி பவுடன் (நியூசிலாந்து) நிராகரித்தார். பின் தேநீர் இடைவேளையின் போது, காம்பிர்-கம்ரான், வார்த்தையால் மோதிக்கொண்டனர். இதில் தலையிட்ட தோனி, காம்பிரை சமாதானம் செய்தார்.
ஹர்பஜன்-அக்தர் வாக்குவாதம்
இந்திய அணியின் வெற்றிக்கு 8 பந்தில் 7 ரன் தேவை என்ற நிலையில், தொடர்ந்து இரு பந்துகளையும் அக்தர், துல்லியமாக வீசினார். இதில் ரன் எடுக்க முடியாத ஹர்பஜன் புலம்பினார். இதையடுத்து அக்தர், ஹர்பஜனை ஏதோ சொன்னார். பின் அம்பயர் தலையிட்டு நிலைமையை சரி செய்தார். ஆமெர் வீசிய கடைசி ஓவரில் சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த ஹர்பஜன், அக்தரை பார்த்து பயங்கரமாக கத்தினார். இதற்கு அக்தர், போ… போ… என்பது போல சைகையில் கூறினார்.

Add Comment