பேரவையில் அதிமுக குற்றச்சாட்டு கருணாநிதி வீடு, அறிவாலயத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு

சென்னை : கருணாநிதி வசித்து வரும் கோபாலபுரம் வீடு மற்றும் திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் நேற்று அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:

முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டிற்கு பின்புறம் உள்ள 60க்கு 13 அடி இடம் கால்வாய் செல்லும் பாதையாகும். மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தை கேட்டு பெற்றனர். அவருக்கு 1967ம் ஆண்டு ணீ3,250க்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்ய வருவார்கள். எனவே அந்த நிலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது, திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.

நிபந்தனைகளை Buy Levitra Online No Prescription மீறி கட்டுமானம் எழுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நிலத்தை திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுத்தது. கருணாநிதி செலுத்திய ணீ3,250 பணம் திரும்ப வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிலம் இன்னும் அவருடைய ஆக்கிரமிப்பில்தான் உள்ளது. இந்த நிலத்தை அரசு மீட்க வேண்டும்.

அண்ணா அறிவாலய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான எட்டே கால் கிரவுண்ட் நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.80 கோடி வரை இருக்கும். விதிமுறைப்படி இந்த நிலத்தில் பூங்கா அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். ஆனால் வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலத்தின் மீது சாலை போடப்பட்டுள்ளது. இதையும் அரசு மீட்க வேண்டும்.

இதைப்போல சைதாப்பேட்டை ஸ்ரீராம் காலனியில் ஒரு கிரவுண்ட் மற்றும் 1,230 சதுர அடி நிலத்தை முன்னாள் அமைச்சர் பொன்முடி தன் உறவினர் பெயரில் ஆக்கிரமித்துள்ளார். அண்ணா நகரில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தம்பி பெயரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.32 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்படி திமுகவினர் பஞ்சபூதங்களையும் ஆக்கிரமித்துள்ளனர்.

(அப்போது திமுக சட்டமன்ற துணைத் தலைவர் துரைமுருகன் பேச எழுந்தார். ஆனால் சட்டப்பேரவைத் தலைவர் ஜெயக்குமார் பேச அனுமதி அளிக்கவில்லை.)
சட்டப்பேரவை தலைவர்: நீங்கள் பலமுறை உறுப்பினராக இருந்துள்ளீர்கள். எந்த விதியின் கீழ் பேசுவேன் என்று சொல்கிறீர்கள். நீங்கள் எழுந்து நின்றால் நான் மைக் இணைப்பு எப்படி கொடுக்க முடியும்.

(தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் பேச அனுமதி அளிக்கும்படி எழுந்து நின்றனர். இதற்கு பதிலடியாக அமைச்சர் கோகுல இந்திரா உள்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று துரைமுருகன் மற்றும் திமுக உறுப்பினர்களை உட்காரும்படி சத்தம் போட்டு கூறினர்.

ஆனாலும் திமுக உறுப்பினர்கள் யாரும் உட்கார மறுத்து, ‘இதற்கு பதில் சொல்ல உரிமை உள்ளது, பேச அனுமதியுங்கள்’ என்று தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் பேரவைத் தலைவர் பேச அனுமதி அளிக்காததால் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் 15 நிமிடம் கூச்சல், குழப்பம் நிலவியது.)

திமுக உறுப்பினர் செல்போன் பறிமுதல்

அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் பேசிக்கொண்டு இருக்கும்போது, அவரது பேச்சுக்கு பதில் கூற திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்றனர். மற்ற அதிமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று மாறி மாறி கூச்சல் போட்டனர். இதனால் சில நிமிடங்களில் அவையில் ஒரே கூச்சலாக இருந்தது. இந்த சமயத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, தனது செல்போனை ‘ஆன்’ செய்து சபை  நடவடிக்கைகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அமைச்சர் ஒருவர், பேரவைத் தலைவரிடம் நேரில் போய் புகார் கூறினார். இதையடுத்து டி.ஆர்.பி.ராஜாவின் செல்போனை பறிமுதல் செய்யும்படி காவலர்களுக்கு பேரவை தலைவர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். பேரவையில் செல்போன் பயன்படுத்தியதாக அவர் மீது கூறப்பட்ட புகார்  உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Add Comment