மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: பிரதிபா பாட்டீல்

புது Buy cheap Bactrim தில்லி, செப். 6: பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறினார். 

ஆசிரியர் தினத்தையொட்டி தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது: 

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 73 சதவீதமாக உள்ளது. இந்த விகிதத்தை கணிசமாக உயர்த்த வேண்டும். 

பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் விகிதம் கவலையளிப்பதாக உள்ளது. இந்தக் குறையைப் போக்க அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். 

ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் கடமையை உணர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கிராமப்புற பள்ளிகளில், கல்வியறிவு இல்லாத பெற்றோரின் குழந்தைகள் அதிகம் உள்ளனர். முதல் தலைமுறையாக கல்வியறிவைப் பெறும் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளும், அறிவுரைகளையும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும். 

மாணவர்களுக்கு முன்மாதிரியாக நேரம் தவறாமையை ஆசிரியர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். 

ஒவ்வொரு பாடத்தையும் நடத்தும்போது மாணவர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்க வேண்டும். எல்லா பாடங்களிலும் புதுமையைப் புகுத்தி எளிய முறையில் மாணவர்களுக்கு விளக்க வேண்டும். 

அன்பு, அமைதி, ஒருமைப்பாடு, சகிப்புத்தன்மை, மதநல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை உள்ளிட்ட உயர் குணாதியங்களை சிறு வயதிலேயே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று பிரதிபா பாட்டீல் கூறினார். 

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 370 ஆசிரியர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். 

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் பேசும்போது, மாணவர்களிடையே மனஅழுத்தம், பதற்றம், தேர்வு பயம் இல்லாத கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.

Add Comment