கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 27). விவசாய கூலித்தொழிலாளி. இவருடையமனைவி முத்துமாரியம்மாள் (24). இவர்களுக்கு திருமணமாகி 2 1/2 ஆண்டு ஆகிறது.மஞ்சுளா Buy Ampicillin Online No Prescription என்ற 8 மாதகுழந்தை இருந்தது.
 கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று  தாய் தற்கொலை; கணவர் கைது
பாலமுருகனின் தாய் மாரியம்மாளுக்கும், முத்துமாரியம்மாளுக்கும் அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்நேற்று பருத்திஎடுப்பதற்காக பால முருகனின்அண்ணன் வேல் முருகன், அவரதுமனைவி பால்கனி ஆகியோருடன், முத்துமாரியம்மாள் தனது குழந்தையுடன் தோட்டத்திற்கு சென்றார். அப்போது தண்ணீர் குடித்துவிட்டுவருவதாக கூறிச்சென்ற முத்துமாரியம்மாள் வெகுநேரமாகியும் திரும்பிவரவில்லை.
ஆகவே பால்கனி, முத்துமாரியம்மாளை தேடிச்சென்றார். அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்று மோட்டார்அறையில் முத்துமாரியம்மாளும், குழந்தை மஞ்சுளாவும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.
மோட்டார் அறையின் கதவுஉள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை திறக்கமுடியவில்லை. இதுகுறித்து கயத்தாறு போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து திறந்து இருவரது பிணத்தையும் கைப்பற்றி கோவில்பட்டி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பிவைத்தனர்.
முத்துமாரியம்மாள் தனது குழந்தைக்கு விஷம்கொடுத்து கொலை செய்து விட்டு, தானும் விஷத்தை குடித்துதற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் முத்துமாரியம்மாள் தனதுகுழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்த அவரது உறவினர்கள், பாலமுருகனின் வீடுகளுக்கு சென்று,அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்தார்கள். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
இதனையறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்துவந்து முத்துமாரியம்மாளின் உறவினர்களை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர். தனது தாயின் பேச்சை கேட்டுக்கொண்டு அடித்து சித்ரவதை செய்ததால் தான், முத்துமாரியம்மாள் ததனது குழந்தையை கோன்று தற்கொலை செய்துள்ளார் என்று கயத்தாறு போலீசில் முத்துமாரியம்மாளின் தந்தை அக்னிமுத்து புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.மேலும் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. பொன்னியின்செல்வனும் விசாரணை மேற்கொண்டார். அதில்பாலமுருகனின் சித்ரவதை தாங்காமலேயே முத்துமாரியம்மாள் தனது குழந்தையை கொன்று தானும் தற்கொலைசெய்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர்மீது போலீசார் வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.

Add Comment