அரசு கேபிளுக்கு எதிர்ப்பு : 300 ஆபரேட்டர்கள் புகார் மனு

அரசு கேபிளுக்கு எதிர்ப்பு : 300 ஆபரேட்டர்கள் புகார் மனு

தமிழகத்தில் தனியார் கேபிள்களை தமிழக அரசு, ’அரசு கேபிள்களில்’ இணைத்து  மாதம் 70 ரூபாய் என்ற கட்டணத்தில் சேனல்களை ஒளிபரப்பி வருகிறது.

இதில் பெண்களிடம் மிகவும் பிரபலமாக உள்ள சன் டிவி, விஜய் டிவி, உட்பட மக்கள் விரும்பிபார்க்கும் பல சேனல்கள் தெரிவதில்லை.   இதனால் மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதனால் online pharmacy no prescription திருவண்ணாமலை மாவட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்களிடம் பொதுமக்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

இதையடுத்து கேபிள் ஆபரேட்டர்கள்,  கட்டண சேனல்கள் அரசு கேபிளில் இல்லை என்று புகார் கூறவும்,  கட்டண சேனல்கள் அனைத்தும் ஒளிபரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியர் அன்சூ.மிஸ்ராவை சந்தித்து  மனு கொடுக்கவும் முடிவு செய்தனர்.
கோரிகை மனு தருவதற்காக 300 க்கும் அதிகமாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.

தகவல்: எஸ்.கே.எம்.ஹபிபுல்லா

Add Comment