ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு செப். 14க்கு ஒத்திவைப்பு

 

Jayalalitha
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் Levitra No Prescription ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்து வருகிறார் ஜெயலலிதா. சமீபத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கு விலக்கு அளிக்குமாறு கோரி மனு செய்தார் ஜெயலலிதா. ஆனால் அதை கோர்ட் ஏற்கவில்லை.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அவர் அணுகினார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு தர இயலாது என்று கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று பெங்களூர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் கந்தசாமி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான இறுதி உத்தரவு செப்டம்பர் 12ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த உத்தரவைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். எனவே அதுவரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த கோரிக்கைக்கு உதவி சிறப்பு அரசு வக்கீல் சந்தேஷ் செளதா ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து செப்டம்பர் 14ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் சார்பில் இன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சசிகலாவின் வக்கீல் இதுகுறித்துக் கூறுகையில், சசிகலாவுக்கு கண்ணில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் நேரில் வர இயலாத இருப்பதாக கூறினார். சுதாகரன் வக்கீல் கூறுகையில், அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். இளவரசியின் வக்கீல் கூறுகையில், தனது மனுதாரருக்கு சர்க்கரை வியாதி முற்றியுள்ளதாக கூறினார்.

Add Comment