தந்தை…

தந்தை…

சிரித்து நீ பேசினாலும்;
ஏனோ;
சில விஷயம்
அன்னையின் Buy Lasix Online No Prescription செவிக்கு
மட்டும் செல்லும்
என் விண்ணப்பம்!

பள்ளிச் செல்ல
மறுக்கும் எனை;
விழிகளால் விரட்டி;
விரல்களால் மிரட்டி;
அகத்தினில் சிரித்து
புறத்தினில் வெடிப்பாய்;
நான் நகர்ந்தப் பின்னே
அன்னையிடம் கூறி
நகைப்பாய்!

நினைவுப் படுத்தாதச்
சரித்திரத்தில்;
நீங்கா இடம் உனக்கு உண்டு!
ஒளிரும் என் வெற்றிக்குள்
ஒளிந்திருக்கும் உன் தியாகம்!

-யாசர் அரஃபாத்

Add Comment