குஜராத் முதல்வர் மோடி தந்த உதவி நிதியை திருப்பி அனுப்பிய நிதிஷ்குமார்

பிகார் வெள்ள நிவாரண நிதியாக குஜராத் முதல்வர்  நரேந்திர மோடி  கொடுத்த ரூ. 5 கோடியை திருப்பி அனுப்பியுள்ளார் பிகார் முதல்வர் நிதிஷ்.

பிகாரில் பாஜகவின் தயவோடு தான் கூட்டணி அரசு நடத்தி வருகிறார் நிதிஷ்குமார். ஆனால், அடுத்தாண்டு அந்த மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பாஜகவிடமிருந்து விலக அவர் முயன்று வருகிறார்.

கடந்தமுறை லாலு பிரசாத் தோற்றதற்கும் நிதிஷ்குமார் ஆட்சிக்கு வரவும் முக்கியமாக இருந்தது அந்த மாநிலத்தின் சிறுபான்மையினரின் வாக்குகள். இந்த வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள இப்போதே தனது முயற்சிகளை ஆரம்பித்துவிட்டார் நிதிஷ்.

இதற்கென Lasix online சமயம் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு சமீபத்தில் பாட்னாவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் வசதியாக அமைந்துவிட்டது.

அதில் பங்கேற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிகார் பத்திரிக்கைகளில் குஜராத் அரசு சார்பில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் தந்திருந்தார்.

பாட்னா கூட்டத்தில் பங்கேற்கும் தனக்கு அந்த பத்திரிக்கைகள் நல்ல கவரெஜ் தரும் என்பது தான் இதற்குக் காரணம். அதில் நிதீஷ்குமாரும் நரேந்திர மோடியும் கைகோர்த்திருப்பதைப் போன்ற படம் இடம் பெற்றிருந்தது.

மேலும் பிகாரில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்துக்கு குஜராத் ரூ. 5 கோடி தந்து உதவியதையும் அந்த விளம்பரம் பெரிதாக விளக்கியது.

இதனால் முஸ்லீம்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதால் இந்த விளம்பரத்துக்கு நிதிஷ்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அன்றைய தினம் பாஜக தலைவர்களுக்கு தர இருந்த விருந்தையும் ரத்து செய்தார். இதனால் கூட்டணி உடையப் போகிறது என்று செய்தி பரவியது. ஆனால், பாஜக அதை பெரிதுபடுத்தவில்லை. மாநிலத் தலைவர்கள் லேசான கண்டனம் தெரிவித்ததுடன் அமைதி காத்துவிட்டது. மூத்த பாஜக தலைவர்கள் யாரும் நிதிசுக்கு எதிராகப் பேசவில்லை.

இந் நிலையில் நேற்று பிகார் வெள்ள நிவாரணத்திற்காக குஜராத் அரசு வழங்கிய ரூ. 5 கோடியை திருப்பி அனுப்ப நிதிஷ்குமார் உத்தரவிட்டார். இதன்மூலம் பாஜகவிடமிருந்து தான் விலக விரும்புவதை நிதிஷ் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

ஆனால், பிகாரில் தனித்துப் போட்டியிடும் நிலையி்ல் பாஜக இல்லை. இதனால் பாஜக அமைதி காத்து, கூட்டணியை தக்க வைக்க முடிந்தவரை முயலும் என்றே தெரிகிறது.

ஒரிஸ்ஸாவில் பாஜக உதவியோடு ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளத் தலைவர் முதல்வர் நவீன் பட்நாயக் , சட்டமன்ற-மக்களவைத் தேர்தலின்போது கடைசி நேரத்தி்ல பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு தனித்துப் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஸ்டைலை நிதிஷ் குமாரும் பின்பற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Add Comment