பெட்ரோல் விலை ரூ.3 உயரலாம்

சிங்கப்பூர் : பெட்ரோல் விலை மீது இழப்பு ரூ.3 ஆக உயர்ந்துள்ளதால் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசிய பசிபிக் பெட்ரோலிய மாநாடு (அப்பெக்), சிங்கப்பூரில் நடந்தது. அதில் இந்தியா சார்பில் பங்கேற்ற இந்தியன் ஆயில் நிறுவன நிதி பிரிவு தலைவர் கோயல், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

ஆகஸ்ட் 15ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பெட்ரோல் விற்பனை விலை மீது சர்வதேச விலையுடன் ஒப்பிடுகையில் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் லிட்டருக்கு 41 பைசாவாக இருந்தது. அடுத்த இரண்டு வாரங்களில், அதாவது 31ம் தேதி நிலவரப்படி இந்த நஷ்டம் லிட்டருக்கு ரூ.3 ஆக அதிகரித்து விட்டது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலையை பொருத்து சர்வதேச நிலவரப்படி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் உரிமை கடந்த ஆண்டு ஜூனில் அளிக்கப்பட்டது. விலை மீது அரசு கட்டுப்பாட்டை விலக்கிக் கொண்டதாக அறிவித்தாலும், மக்கள் நலன் கருதி விலை உயர்வில் எண்ணெய் நிறுவனங்கள் அவசரம் காட்டவில்லை. இப்போது நஷ்டம் லிட்டருக்கு ரூ.3 ஆகி விட்டதால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

நாட்டின் Bactrim No Prescription மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமாக இந்தியன் ஆயின் உள்ளது. அது ஒரிசாவில் பாரதீப் பகுதியில் ஆண்டுக்கு 3 லட்சம் டன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைத்து வருகிறது. நாட்டின் மொத்த சுத்திகரிப்பு திறனான 4.17 லட்சம் டன்னில் இந்தியன் ஆயில் 3ல் ஒரு பங்கு வகிக்கிறது.
இவ்வாறு கோயல் தெரிவித்தார்.

Add Comment