சிறைகளில் ஜாலியாக இருக்கிறார்கள் திமுகவினர்: தேமுதிக புகார்- ஜெயலலிதா மறுப்பு

சென்னை: நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள திமுகவினர் சிறைகளில் உல்லாசமாக இருப்பதாக சட்டசபையில் தேமுதிக புகார் கூறியது. இதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது என்று அறிவுறுத்தினார்.

சட்டசபையில் இன்று பேசிய தேமுதிக உறுப்பினர் அருண் சுப்பிரமணியம், சிறைகளில் Buy Lasix அடைக்கப்படும் திமுகவினர் அங்கு உல்லாசமாக இருக்கின்றனர் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, அது குறித்து ஆதாரம் இருந்தால் அளிக்கலாம்; ஆதாரம் இல்லாமல் அளிக்கக்கூடாது என்றார்.

அதற்குப் பதிலளித்த அருண் சுப்பிரமணியம், பொதுமக்கள் இவ்வாறு பேசிக் கொள்கிறார்கள். இருப்பினும் தனிப்பட்ட முறையில் ஆதாரம் இருந்தால் கொடுக்கிறேன் என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர், தனிப்பட்ட முறையில் ஆதாரங்களைத் தருவதாக இருந்தால் அதுகுறித்து சட்டசபையில் பேசக்கூடாது. சட்டசபையில் எப்போதுமே உரிய ஆதாரங்களுடன்தான் பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Add Comment