தமிழக முஸ்லிம்களுக்கு முக்கிய அறிவிப்பு& வேண்டுகோள்!

தமிழக முஸ்லிம்களுக்கு முக்கிய அறிவிப்பு& வேண்டுகோள்!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் ஊரில் SUMITTERS TO GOD ALONE (கடவுளுக்கே சரணம்) என்ற இஸ்லாத்திற்கு எதிரான குழுவினர் உள்ளனர். ஆனால் அவர்கள் கொண்டுள்ளதோ முஸ்லிம் பெயர்கள்.   அவர்களுக்கு எதிராக அவ்வூர் ஜமாத் 19-08-09 அன்று தீர்மானம் நிறைவேற்றியது.

 • அவர்களுக்கு நிக்காஹ் தப்தர் கொடுப்பதில்லை.
 • அவர்களுக்கு முஸ்லிம் கபர்ஸ்தானில் அடக்க அனுமதி இல்லை.
 • கல்யாண வைபவங்களுக்கு அவர்களை அழைப்பதில்லை. அவர்களுடைய விழாவுக்கு  போவதுமில்லை என்று அவர்களை விலக்கி வைத்தது.

இதை எதிர்த்துஅவர்கள் கோர்ட்டுக்கு போனார்கள். சென்னை ஹைகோர்ட் பெஞ்ச் அவர்களுடைய வழக்கை 23-06-11 அன்று தள்ளுபடி செய்துவிட்டது.

 • இவர்கள் அல்லாஹ்வை GOD என்பவர்கள்.
 • குர் ஆன் மட்டும் போதும் என்று சொல்லி அதில் 9 : 128 & 129 ஆகிய வசனங்களை நீக்கியுள்ளார்கள்.
 • நபிகள் நாயகத்தையும் ஹதீஸையும் முழுமையாக மறுத்துவிட்டு ரஷாத் கலிபாவை இறுதித்தூதராக ஏற்பவர்கள் ( 7 :158 , 33 : 40 ஐ பார்க்கட்டும் ) .
 • கலிமாவில் லாயிலாஹா இல்லல்லாஹ்” மட்டும் தான் சொல்வார்கள் (முகமது(ஸல்) அதில் வருவதால்).
 • ஐந்து வேளையும் அல்ஹம்து மட்டும் ஓதி ரக்அத்கள் தான் தொழுவார்கள்,  முஹம்மது (ஸல்) அவர்களின் பெயர் அதில் வருவதால் அத்தஹியாத் ஓதமாட்டார்கள்.
 • ஹஜ் நான்கில் எந்த மாதத்திலும் நிறைவேற்றலாம் என்பார்கள்.
 • பணம் கிடைத்த அன்றே 2 ½ சதம் ஜக்காத் கொடுத்துவிட வேண்டும் என்பார்கள். 

  இவர்கள் இஸ்லாமிய அடிப்படைகளைத் தகர்த்தவர்கள். ஸவூதி ராபிதாதேவ்பந்த்Buy Ampicillin Latha;”>பாக்கியாத் ஆகிய அமைப்புகள் இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஃபத்வாக் கொடுத்துள்ளனர். •  இவர்களில் ஒருவர் மனைவியுடன் உடலுறவு கொண்டபின்பும் குளிக்காமல் தொழுகையை நிறைவேற்றலாம் என கூறினார்.
  •  
  இன்னொருவர் எல்லா வேதங்களையும்யஜூர்அதர்வன உள்பட குத்பாவில் படிக்க வேண்டுமென்றார்.
  •  
  விநாயகரும் நமக்குக் கடவுளே என்றார் இன்னொருவர்.
  •  
  இப்படி ஆளுக்காள் பத்வா கொடுத்தார்கள்.
  •  
  ஒருவர் நானும் ஒரு நபியே என்று அறிவிப்புச்செய்தார்.
  இந்த குழப்பங்களுக்குக் காரணம் என்ன என்பதை அவர்களே ஆராய்ந்து பார்க்கட்டும். ஜமாத்துல் உலமா சபை இதனைத் தமிழகமெங்கும் ஜும்ஆக்களில் சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.   

நன்றி.

வஸ்ஸலாம்.
அன்புடன்
கேப்டன்.N.A.அமீர் அலி M.A.

Add Comment