சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவு கூடி வருகிறது

ஆசியாவிலேயே வாழ்வதற்கு அதிக செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் 9வது இடத்தில் உள்ளது.
இவ்வட்டாரத்தின் மற்ற முக்கிய நாணயங்களோடு ஒப்பிடுகையில், சிங்கப்பூரின் நாணயம் வலுவாக இருப்பதாக ECA இன்டர்நேஷனல் மனிதவள ஆலோசனை நிறுவனம் கூறியது.

அதோடு, வெளிநாட்டுக் குடியேறிகள் பொதுவாக வாங்கும் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றின் விலைகள், மற்ற வளர்ச்சியடைந்த நகரங்களைவிட சிங்கப்பூரில் வெகுவாக அதிகரித்திருப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.

உலக அரங்கில், வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ள நகரங்களில் சிங்கப்பூர் தற்போது 67வது இடத்தில் உள்ளது. சீனாவின் குவாங்ஜாவ், ஷென்ஜென் ஆகிய நகரங்களையும்விட சிங்கப்பூரின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து விட்டது.

மேலும் சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையேயான வாழ்க்கைச் செலவு அளவின் வித்தியாசமும் குறைந்துள்ளது.

Buy cheap Viagra justify;”>உலகிலும், ஆசியாவிலும் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ள நகரங்களில் ஜப்பானின் தோக்கியோ நகரம் முதலிடத்தில் உள்ளது.

மிகவும் விலையான பத்து ஆசிய நகரங்கள் பட்டியலில் தென் கொரியாவின் சோல், பூசான் நகரங்களும், ஹாங்காங், பெய்ஜிங், ஷங்காய் ஆகியவையும் இடம்பெற்றன.
கடந்த ஓராண்டில், ஆசிய நாணயங்கள் வலுவடைந்ததால், செலவுகளும் அதிகரித்ததாக நிறுவனம் கூறியது.

உலகிலேயே இரண்டாவது செலவுமிக்க நகரம் நார்வேயின் ஒஸ்லோ. இதுவே ஐரோப்பாவின் ஆக செலவுமிக்க நாடும் ஆகும்.

நவ்பல் சிங்கப்பூர்

Add Comment