தென்காசி மாநகரில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மூன்றாம் மாநில மாநாடு

தென்பொதிகை தாலாட்டும் தென்காசி மாநகரில்
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின்
மூன்றாம் மாநில மாநாடு
2011 செப்டம்பர்30 ௦-அக்டோபர் 1 -2

Buy Amoxil Online No Prescription style=”text-align: justify;”>நீடூர்- மயிலாடுதுறையில் நடத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட மாநாடு குற்றாலம்-தென்காசியில் செப்டம்பர் -முப்பது அக்டோபர் முதல் இரண்டாம் தேதிகளில் இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கிறது. தென் மாவட்டங்களில் நடைபெற இருக்கும் முதல் இஸ்லாமிய மாநாடாக இது இருக்கும்.

செப்டம்பர் முப்பதாம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு அல்ஹாஜ் எஸ். எம் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் தொடங்கும் இஸ்லாமிய இலக்கியக் கழக மூன்றாவது மாநில மாநாட்டினை டாக்டர் ஹிமான சையது (சிங்கப்பூர்) தொடக்க உரை ஆற்றி துவக்கி வைக்கிறார்கள். அல் ஹாஜ் பத்ஹூர் ரப்பானி சாஹிப் , கேப்டன் அமீரலி , கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் கமால் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

செப்டம்பர் முப்பதாம் தேதி (முதல் நாள்) படைப்பிலக்கிய பயிலரங்கு நடைபெற இருக்கிறது. இரண்டாம் நாளும் ஆறு தலைப்புக்களில் அறிஞர் பெருமாக்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

மூன்றாம் நிகழ்ச்சிகள் தென்காசி யில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் கருத்தரங்கு, கவியரங்கு விருது வழங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன (இன்ஷா அல்லாஹ்)

மாநாட்டின் நிறைவாக ஜனாப் டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் திருமிகு. வைகோ அவர்கள் நிறைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்கள்

பயிலரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் தன் விவரக் குறிப்பு, தங்களது படைப்பு முகவரி, தொடர்பு எண்ஆகியவற்றுடன் செப்டம்பர் இருபதாம் தேதிக்குள் பொதுச்செயலாளரின் முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் மாநாட்டின் பேராளர்களாக பங்கேற்போரும் தன் விவரக் குறிப்புடன் பெயர், முகவரி தொடர்பு எண் ஆகியவற்றை பொருளாளர் முகவரியில் செப்டம்பர் இருபதாம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் .

பதிவு செய்து கொள்வோருக்கு தாங்கும் இடம் உணவு ஏற்பாடுகள் செய்து தரப்படும். பேராளர்களுக்கு கட்டணம் இல்லை. மகளிருக்கு தாங்கும் இட வசதி தனியாக உண்டு.

பேராளர் பதிவுக்கு பொருளாளர் முகவரி:
அல் ஹாஜ் எஸ் எஸ் ஷாஜஹான் , பொருளாளர்
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
௨ , வடக்கு உஸ்மான் சாலை , முதல் மாடி,
தியாராய நகர் , சென்னை -600017
தொடர்பு எண் : 9444047786
பயிலரங்க பதிவுக்கு :
பேராசிரியர் அப்துல் சமது
பொதுச்செயலாளர்
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
46 /7pee டி ஆர் காலனி உத்தம பாளையம்
தேனி
தொடர்பு எண் : 9364266001

Add Comment