சிங்கப்பூரில் இஸ்லாமிய நிதித் துறைக்குப் பெரும் பங்கு: அமைச்சர் லிம்

இஸ்லாமிய நிதித்துறை உலகளாவிய நிதித்துறையில் இன்னும் பெரிய, மையமான பங்காற்றவிருக்கிறது.
அதிகரித்து Buy cheap Lasix வரும் விழிப் புணர்வும் நிதி நிலையங்களின் ஏற்பும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.

சிங்கப்பூரில் திங்கட்கிழமை தொடங்கிய முதல் உலக இஸ்லாமிய வங்கித்துறை மாநாட்டின் ஆசிய உச்ச நிலைக் கூட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார் வர்த்தகத் தொழில் அமைச்சர் லிம் ஹங் கியாங்.

சிங்கப்பூர் நாணய வாரியத்தின் துணைத் தலைவருமான திரு லிம், வழக்கமான நிதித்துறையைவிட இஸ்லாமிய நிதித்துறை இருமடங்கு அதிக வேகத்தில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சொன்னார்.

இஸ்லாமிய நிதித்துறையின் மொத்த சொத்து மதிப்பு கூடிய விரைவில் $1 டிரில்லியன் யுஎஸ் டாலரைத் தாண்டிவிடும் என்று சில ஆய்வுகள் கணிப்பதாக அவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய நிதித்துறையை மேம்படுத்துவதில் மேலும் பரந்த பங்காற்ற சிங்கப்பூர் தயாராக இருப்பதாகத் திரு லிம் கூறினார்.

மத்தியக் கிழக்கும் ஆசியாவும் ஒருவர் மற்றவரது வளர்ச்சிக்குத் துணை புரிந்து, பரஸ்பர நன்மைக்காகப் புதிய வளர்ச்சித் துறைகளை ஆராயலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

ஆனால், ஈராண்டுகளுக்கு முன் நிதி நெருக்கடி நிலை கற்றுத் தந்த பாடங்களை இஸ்லாமிய நிதித்துறை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

அதோடு, மூலதன வளம், சந்தை ரொக்கப்புழக்கம், இடர் நிர்வாகம் போன்ற விவகாரங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இச்சவால்களைச் சமாளிக்க தொழில்துறையில் வலுவான ஒத்துழைப்பு நிலவவேண்டும் என்றார் திரு லிம்.
உலக இஸ்லாமிய வங்கித்துறை மாநாடு கடந்த 16 ஆண்டுகளாக பஹ்ரேனில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மாநாட்டின் ஆசிய உச்சநிலைக் கூட்டம் இனிமேல் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் நடைபெறும்.
உச்சநிலைக் கூட்டம் காலப்போக்கில் இஸ்லாமிய நிதித்துறையில் முக்கிய நிகழ்ச்சியாகத் தலையெடுத்து, மத்தியக் கிழக்குக்கும் ஆசியாவுக்கும் இடையில் இன்னும் அதிக ஈடுபாட்டைத் தூண்டும் என்று சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளது.

நவ்பல் சிங்கப்பூர்

Add Comment