கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியா ?

கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியா ?

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களை கட்டிவிட்டது . அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டன .

தமிழகத்தில் , குறிப்பிட்டு சொல்லும்படியான ஊர்களில் நமது கடயநல்லூரும் ஒரு ஊராகும் .அதுவும் ,கடையநல்லூர் நகராட்சி முதல்தர நகராட்சியாகும் .

எனவே , உள்ளாட்சி தேர்தலுக்கான  வேலைகளை கடையநல்லூரில் அரசியல் கட்சிகள் பரபரப்புடன் ஆரம்பித்துவிட்டன .
ஆளும் அதிமுக கூட்டணி ஒருபுறம் , திமுக கூட்டணி ஒருபுறம் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டன .  கடையநல்லூரை பொருத்தவரை திமுக கூட்டணியில் ஒரு முக்கிய அங்கமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது . தற்போதைய நகராட்சியில் 5 உறுபினர்கள் அக்கட்சிக்கு உள்ளனர். ஏற்கனவே ,நகர்மன்ற துணை தலைவராகவும் அக்கட்சியை சார்ந்தவர் பதவி வகித்துள்ளார். கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் கடையநல்லூரை கேட்டும் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்கிற்கு கொடுக்கபடவில்லை ;கடந்த உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவி கேட்டும் கிடைக்க வில்லை .

எனவே ,இந்த தடவை எப்படியாவது நகராட்சி தலைவர் பதவிக்கு  திமுக அணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறும் முயற்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடையநல்லூர் நிர்வாகிகளும் ,நெல்லை மாவட்ட நிர்வாகிகளும் களத்தில் இறங்கியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை என்றால் அனைத்து பகுதி மக்களுக்காவும் போராடியது ,அங்கீகரிக்க படாமல் இருந்த அனைத்து பகுதி மக்களுக்காவும் சதி ,சமய வேறு பாடு காட்டாமல் உண்ணா விரதப்போராட்டம் நடத்தி வெற்றிகொண்டது , அநியாயமாக குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு உயர்த்தப்பட வீட்டு வரியையும் ,வணிகர்களுக்கு அநியாமாக உயர்த்தப்பட்ட வணிக வரியையும் குறைக்கா கோரி தொடர்போராட்டங்களை நடத்தி வெற்றிகண்டது போன்ற பல்வேறு விசயங்கள் இந்திய யூனியன் Buy cheap Amoxil முஸ்லிம் லீக் கட்சி நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கு சாதகமாக அமையும் என்று அக்கட்சியினர் கருதுகின்றனர் .

தகவல் : எஸ்.கே.எம்.ஹபிபுல்லா

Add Comment