சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து திருச்சி இடைத் தேர்தலையும் புறக்கணிக்கும் வைகோ

Vaiko
கும்பகோணம்: திருச்சி இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம். Doxycycline online உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கும்பகோணம் வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். இருப்பினும் இந்தத் தேர்தலில் திமுகவுடனோ அல்லது அதிமுகவுடனோ நாங்கள் கூட்டணி சேர மாட்டோம்.

ஒத்த கருத்துக்களுடைய கட்சிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம்.

அதேசமயம், திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடியும் மதிமுக எடுத்துள்ளது. இத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்றார் அவர்.

அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து கடந்த சட்டமன்றத் தேர்தலையும் மதிமுக புறக்கணித்தது நினைவுகூறத்தக்கது.

Add Comment