சாதி வெறி! மகளையும் காதலனையும் கொலை செய்த பெற்றோர்

வேறு ஜாதியை சேர்ந்தவரை காதலித்த மகளையும், காதலனையும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டில் கட்டி போட்டு, மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்து, விடிய விடிய அடித்து கொன்றுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவம் தலைநகர் டெல்லியில நடந்துள்ளது.டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஆஷா சைனி (19). இவரது தந்தை உணவு தானியம் விற்கும் வியாபாரி. மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்த ஆஷாவுக்கு, யோகேஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்துள்ளனர்.
யோகேஷ் வேறு ஜாதியைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இந்த காதலுக்கு பெற்றோர் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

Buy Viagra Online No Prescription justify;”>இது எப்படியோ ஆஷா குடும்பத்துக்கு தெரிந்து விட்டது. ஆஷாவையும், யோகேஷையும் டெல்லி ஸ்வரூப் நகரில் உள்ள ஆஷாவின் மாமா வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை அழைத்துச் சென்றனர். இருவரையும் ஒரு அறையில் கட்டிவைத்து இரும்பு தடியால் அடித்து உதைத்துள்ளனர். இருவரது உடலிலும் மின்சாரத்தை பாய்ச்சியும் கொடுமைப்படுத்தியுள்ளனர். “யோகேஷை விட்டு விடுங்கள்” என ஆஷா கதறியுள்ளார்.

இவரது அலறல் சத்தம் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 3 மணிவரை கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று எவ்வளவோ சொல்லியும் ஆஷா குடும்பத்தினர் கேட்கவில்லை. காதலர்களை அடித்தே கொன்றனர்.

இந்த கொடூரக் கொலை குறித்து வடமேற்கு டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜாதி மாறி காதலிப்பவர்களை குடும்ப கவுரவத்துக்காக கொலை செய்யும் சம்பவம் வட மாநிலங்களில் அதிகரித்து வருகிறது.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தாமதமாக தகவல் வருவதால், இது போன்ற கொடூர கொலைகள் தடுக்க முடியாமல் போகிறது என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Add Comment