கடையநல்லூர் வாசிகளே உள்ளாட்சி தேர்தலில் விளிப்புடன் இருங்கள்இவர்களை தேர்ந்தெடுங்கள் ……..

இவர்களை தேர்ந்தெடுங்கள் ……..

 

                                                       சட்ட மன்ற தேர்தல் திருவிழா இரண்டு மாத காலம் நடைபெற்றது .தேர்தல் முடிந்து ஒரு மாத காலம் அரசியல் கட்சித் தலைவர்களையும் ,அந்த தொகுதி வேட்பாளர்களையும் பதற்றமடையச் செய்ததேர்தல் முடிவுகள் மே 13 ம் தேதி வெளி இடப்பட்டு  இதில் ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைந்துள்ளது .ஒவ்வொரு சட்ட மன்ற  தேர்தலிலும் பிரதான இரண்டு கட்சிகளையே மக்கள் மாற்றி  மாற்றி ஆட்சி பொறுப்பில் அமர்த்தி வருகிறார்கள் .இவைகளை வைத்து பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறார்கள் என்பது தெரியவருகிறது .

 

அடுத்ததாக நாம் சந்திக்க இருப்பது உள்ளாட்சி தேர்தல் திருவிழா .இந்த தேர்தல்

உங்களை நெருங்குவதற்கு முன்பு உங்களின் கவனத்திற்கு சில கருத்துக்களை கொண்டு வருகிறோம் .

  நகரமன்ற உறுப்பினராக ,நகரமன்ற தலைவராக நாம் தேர்ந்தெடுக்கப் போகும்

நபர்கள் நம்முடைய வார்டுக்கும் ,நம்முடைய ஊருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை அரசிடம் போராடிப் பெற்று மக்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கவும் ,சாலை வசதி ,தெரு விளக்கு  வசதி ,சுகாதாரம் பேணுதல் ,அரசின் நலத் திட்டங்கள் தகுதியான நபர்களுக்கு கிடைக்கச் செய்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும்.

  இப்போது நாம் பார்த்தோம் என்றால் அனைத்து மட்டங்களிலும் லஞ்சம் .ஊழல்

அதிகமாகிவிட்டது .இந்த லஞ்சம் .ஊழல் போன்றவற்றை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா கொண்டு

வர கேட்டு அன்னா கசாரே குழுவினர் உண்ணா விரதம் இருந்து மத்திய அரசும் அவர்களின் கோரிக்கையை

ஏற்றது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே .இந்த சட்டத்தால் மட்டுமே லஞ்சம் .ஊழல் போன்ற நாட்டை

சுரண்டும் buy Cialis online நபர்களை தண்டித்துவிட முடியாது .நாம் தேர்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் நல்லவர்களாக

இருக்கவேண்டும் .இதனை நாம் கீழ் மட்டத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும் .

 

 

                                                        இங்கு குறிப்பிட வரும் விஷயம் என்ன என்றால் நாம் தேர்ந்தெடுக்கப்போகும் வார்டு உறுப்பினர் நம்முடிய வார்டு மக்களின் ஒட்டு மொத்த குரலாக நகர்மன்றத்தில் ஒலிக்ககூடிய ,அனைத்து விபரங்களையும் அறிந்த ,மக்களின் தேவைகளை உடனுக்குடன் நகரமன்ற நிர்வாகத்திடம் போராடிப் பெற்று

வரக்கூடிய ஒருவரை தேர்தெடுக்க தயாராகுங்கள் . உங்களின் கோரிக்கைகளை உங்களின் குரலாக ஒலிக்ககூடிய ஒருவரை அரசியல் கட்சி ,வேறுபாடுஉள்ளூர்கட்சி வேறுபாடு பார்க்காமல் ,நல்லவரா நமக்காக போராடக்கூடிய ஒருவர என்றுபார்த்து தேர்தெடுங்கள் .

   இது ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் ,இந்த தேர்வு நகரமன்ற வார்டுகளில் இருந்து

ஆரம்பமாகட்டும் ,இதன் தொடர்ச்சி அடுத்தடுத்து உங்களை அறியாமலே ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு

மாற்றத்தை உருவாக்கும் .நல்லவர்கள் ,நமக்காக போராடக்கூடியவர்கள் இனி நகர்மன்றங்களிலும் ,சட்டமன்றங்களிலும் ,நாடாளுமன்றங்களிலும் இருப்பார்கள் என்ற பலமான நம்பிக்கை நமக்குள் ஏற்படும்   .

       எனவே உங்களுக்காக ஒருவரை உங்கள் குரலாக ஒலிக்க தேர்ந்தெடுங்கள் .

 

 

நல்லூர் கதிரவன் 

Add Comment