வைகோவிடம் விஞ்சி இருப்பது அரசியல் ஆளுமையா? லட்சிய வேட்கையா? நாஞ்சில் சம்பத் தீர்ப்பு

 

2016 சட்டசபை தேர்தலே நம் இலக்கு. அந்த தேர்தலில் மக்கள், ம.தி.மு.க.விற்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று நாஞ்சில் Buy Amoxil சம்பத் கூறினார்.

 

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில், ம.தி.மு.க.வின் சார்பில் அரசியல் பட்டிமன்றம் நடைபெற்றது. வைகோவிடம் விஞ்சி இருப்பது அரசியல் ஆளுமையா? லட்சிய வேட்கையா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. அரசியல் ஆளுமையே என்ற தலைப்பில் அழகு சுந்தரம் மற்றும் தமிழ்மாணிக்கம் ஆகியோரும், லட்சிய வேட்கையே என்ற தலைப்பில் அழகிரி மற்றம் விடுதலை வேந்தன் ஆகியோரும் பேசினர்.

பட்டிமன்றத்திற்கு ம.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நடுவராக இருந்தார். அவர் பேசியதாவது:

தமிழகத்தில் தி.மு.க.வினர் தங்கள் சொத்தை பாதுகாப்பதில் குறியாக உள்ளனர். ஆள்பவர்கள் அதை பறிப்பதில் குறியாக உள்ளனர். என்றும் மக்களுக்காக குரல் கொடுப்பவர் வைகோதான். அவர் துயில் கொள்ளாமல் பணியாற்றுபவர். தமிழ் ஈழம் அமைய பாடுபடுபவர்.

நெல்லையில் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில், படை பெருத்ததால், பார் சிறுத்ததோ என்று எண்ணும் அளவில் நாம் அங்கு குவிய வேண்டும். வருகிற 2016 சட்டசபை தேர்தல் நம் இலக்கு. மக்கள் சிந்தித்து, ம.தி.மு.க.விற்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். வைகோவிடம் விஞ்சி இருப்பது என்னவென்று கேட்டால், சின்ன குழந்தை கூட சொல்லும், அது லட்சிய வேட்கையே என்று. இவ்வாறு அவர் பேசினார்.

Add Comment