இலவசமாக கல்வி பெற, ஆக., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் !

குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் இலவசமாக கல்வி பெற, ஆக., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தெரிவித்துள்ளது. இலவச கல்வி திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 3 ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினரை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இலவச கல்வி திட்டத்தின் கீழ் சிறப்பு கட்டணம், திரும்ப பெற இயலாத கட்டாய கட்டணங்கள், அரசு நிர்ணயித்த தேர்வு கட்டணங்கள் முழுமையாக வழங்கப்பட்டு வருகின்றன.

முதல் பட்டதாரி: மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற தொழிற்கல்வி பட்டபடிப்பில் படிப்பவர்களுக்கும், தனியார் கல்லூரியில் கவுன்சிலிங் மூலமாக, அரசு இடஒதுக்கீடு பெற்றவர்களுக்கும் அரசு, அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் ஆகியவற்றில் படிக்கும் பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட Buy Bactrim Online No Prescription வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் தங்களது குடும்பத்தில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்த ஒருவரும் இல்லை என சான்று பெற வேண்டும்.

பெற்றோரது வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கு இலவச கல்வி பெற சிறப்புக்கட்டணம், தேர்வு கட்டணம், திரும்ப பெற முடியாத கட்டணங்கள் அரசே வழங்கவுள்ளது. பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு, இதர படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட உள்ளன.

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் இலவசமாக பெற்று, பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் ஆக., 31க்குள் வழங்க வேண்டும். ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெற்று புதுப்பித்தல் செய்பவர்கள், ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென பிற்பட்டோர் நலத்துறை தெரிவித்துள்ளது. மேலும் விவரங்கள் அறிய, அந்தந்த மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

Add Comment