கன்றுக்குட்டி காங்கிரஸ்காரர் ஈ.வி.கே.எஸ். பேச்சுக்கு கண்டனம்: பழ.நெடுமாறன் அறிக்கை

  தூக்கு தண்டனைப் பற்றிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சால், தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும் என்று பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தமிழர்கள் உயிர்காப்புக் குழுவினர் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜீவ் கொலையாளிகள் மூவரையும் சிறைக்குள் சென்று கொன்றிருக்க வேண்டும். அப்படி செய்யாததால்தான் இன்று விடுதலை செய்ய வேண்டும் என்கிற அளவுக்குப் பேச ஆரம்பித்துவிட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பகிரங்கமாகப் பேசியிருக்கிறார்.

அவரின் இந்தக் கொலை வெறிப் பேச்சை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மகாத்மா காந்தி கொலை வழக்கில் கோட்சே, ஆட்சே ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என காந்தியடிகள் புதல்வர்களான தேவதாஸ் காந்தி, ராம்தாஸ் காந்தி ஆகியோர் உட்பட காந்தியடிகளுக்கு நெருக்கமாக இருந்த சிலர் கையெழுத்திட்ட கருணை மனு ஒன்றினை அன்றைய பிரதமர் நேருவுக்கு அனுப்பி வைத்தார்கள் என்பதை இளங்கோவன் போன்ற கன்றுக்குட்டி காங்கிரஸ்காரர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்னும் இயக்கம் உலகம் முழுவதும் நடைபெற்று மிகப்பெரும்பாலான நாடுகளில் அந்தத் தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. இதையெல்லாம் உணராமல் இளங்கோவன் பேசுகிறார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலிலும் இளங்கோவனுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் மறக்க முடியாத பாடத்தை மக்கள் கற்பித்திருக்கிறார்கள். ஆனாலும் இளங்கோவன் போன்றவர்களின் பாசிச வெறிப்போக்கு அடங்கவில்லை.

தமிழக மக்களின் மன உணர்வுகளை மதித்து தமிழக சட்டமன்றத்தில் முவரின் தூக்கு தண்டணையைக் குறைக்க வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா தீர்மானம்நிறைவேற்றச் செய்ததையும், அனைத்துக் கட்சிகளும் இணைந்து அதற்கு ஆதரவு அளித்ததையும் மதியாமல் மிரட்டும் போக்கில் இளங்கோவன் பேசியிருப்பது அவர் சாந்திருக்கிற காங்கிரஸ் கட்சியை ஆழமாக குழிதோண்டிப் புதைத்துவிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு buy Amoxil online பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளா

Add Comment