கருப்பசாமி பாண்டியன் பேட்டி எனது குடும்பத்தினருக்கு ஒரு சென்ட் நிலம் கூட கிடையாது

நெல்லை: கைதான கருப்பசாமி பாண்டியன் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 100 நாட்களாக திமுகவினர் மீது பழிதீர்க்கும் நடவடிக்கை நடந்து கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக என் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனது 38 வருட பொது வாழ்க்கையில் இதுவரை என் மீது யாரும் எந்த காவல் நிலையத்திலும் ஒரு சிறு புகார்கூட செய்யவில்லை. தமிழ்நாட்டு எல்லைக்குள் ஒரு சென்ட் இடம்கூட என் பெயரிலோ, என் மனைவி, ஆண், பெண் குழந்தைகள் பெயரிலோ வாங்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் எந்த நில விவகாரத்திலும் என் குடும்பத்தினர் மீடியேட்டராக கூட செயல்பட்டதாக வழக்குகள் பதிவாகவில்லை. இப்போது ஒரு சர்ச்சைக்குரிய இடத்தை வாங்கியதாக Buy Viagra Online No Prescription பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். எங்கள் அனைவரையும் சிறையில் வைத்து விட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் திமுக மேலும் வளருமே தவிர அழித்துவிட முடியாது. திமுகவுக்காக சிறைவாசம் மட்டுமல்ல உயிர் தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நில மோசடி வழக்கில் கருப்பசாமி பாண்டியன் சிறையில் அடைப்பு

நெல்லை: நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் நேற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பாமி பாண்டியன், பாளையங்கோட்டை அருகேயுள்ள திருத்து கிராமத்தில் வசிக்கிறார். நேற்று அதிகாலை 3 மணிக்கு கருப்பசாமி பாண்டியன் வீடு அருகே போலீஸ் படை குவிக்கப்பட்டது. பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் கொம்பையா. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் ஊருக்கு அருகே உள்ளது. இந்த நிலத்தை கருப்பசாமி பாண்டியனின் அண்ணன் சங்கரசுப்பு, போலி ஆவணங்கள் தயாரித்து பத்திர பதிவு செய்தததாகவும், இதற்கு உடந்தையாக கருப்பசாமி பாண்டியன் இருந்ததாகவும் பாளையங்கோட்டை தாலுகா போலீசில் கொம்பையா புகார் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் கருப்பசாமி பாண்டியனை கைது செய்ய காலை 6 மணிக்கு அவரது வீட்டுக்குள் ஏடிஎஸ்பி சொக்கலிங்கம், தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் மற்றும் போலீசார் சென்றனர். நிலமோசடி வழக்கில் அவர் கைது செய்யப்படுவதாக தெரிவித்தனர். இதே போல் பக்கத்து வீட்டில் இருந்த அவரது அண்ணன் சங்கரசுப்புவையும் கைது செய்தனர்.

இந்த நிலத்தை கருப்பசாமி பாண்டியனின் அண்ணன் சங்கரசுப்பு(67), தனது மகள் சுந்தரி பெயரில் பத்திரம் பதிந்துள்ளார். கருப்பசாமி பாண்டியன், அவரது அண்ணன் சங்கரசுப்பு, அவரது மகள் சுந்தரி, உறவினர் பரமசிவ அய்யப்பன் மற்றும் கல்லத்தியான் ஆகியோர் மீது போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் அபகரித்தல், கூட்டு சதி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைதான கருப்பசாமி பாண்டியன், சங்கரசுப்பு இருவரும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் நெல்லை 4வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பால்பாண்டியன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  கருப்பசாமி பாண்டியனை மதுரை சிறையிலும், சங்கரசுப்புவை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் 14 நாள் காவலில் வைக்குமாறும், வரும் 23ம் தேதி நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.1ல் ஆஜர்படுத்துமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இருவரும் தனித்தனி வேன்களில் சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கருப்பசாமி பாண்டியனை போலீசார் கைது செய்ததை அறிந்த திமுகவினர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குவிந்தனர். முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, துணை மேயர் முத்துராமலிங்கம், தச்சை மண்டல தலைவர் சுப்பிரமணியன், நெல்லை மண்டல தலைவர் விஸ்வநாத பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள், முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷமிட்டனர். சங்கரசுப்புவின் மகள் சுந்தரி, உறவினர் பரமசிவ அய்யப்பன், கல்லத்தியான் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Add Comment